தயாரிப்பாளர் கத்திரியால் “கட்” ஆன பாலா! ஷாக் ஆன திரையுலகம்

ஒரு கல்யாண மண்டபத்தில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை கையில் இருந்த தாலியை பிடுங்கி விரட்டி விட்டு வேறு மாப்பிள்ளை விரைவில் காண்பிக்கிறோம் என்றால் அந்த மாப்பிள்ளைக்கு எப்படி இருக்குமோ அப்படி ஆகிப்போனது இயக்குனர் பாலா நிலை.

விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகம் ஆக இருந்த படம் வர்மா.
தெலுங்கில் மெகா ஹிட் ஆன அர்ஜுன் ரெட்டி படத்தைதான் இயக்குனர் பாலா ரீமேக் செய்யப்போகிறார் என அறிவித்தார்கள்.
பல மாதங்கள் படப்பிடிப்பு நடந்தது.
சில மாதங்களுக்கு முன் துருவ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வர்மா டிரைலர் வெளியீடும் நடை பெற்றது.
படம் முழுதும் முடிந்து ரிலீசுக்கு ரெடி ஆனது.
படத்தை பார்த்த விக்ரம், மற்ற தயாரிப்பாளர் உட்பட விக்ரம் நண்பர்களும் பயங்கர ஷாக் ஆகி இருக்கிறார்கள்.
காரணம்… தெலுங்கில் வசூல் வேட்டையாடி மெகா ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி படத்துக்கும் இப்போது பாலா காண்பித்த வர்மா படத்துக்கும் தொடர்பே இல்லாமல் புதுக் கதையாக இருந்ததுதான்.

விக்ரம் தன் மகனின் அறிமுக படம் மிகப்பெரிய ஹிட் அடிக்க வேண்டும் என்பதற்காக தான் வேறு ஒரு மொழியில் ஹிட் அடித்த படத்தை ரீமேக் செய்து அதில் தன் மகனை நடிக்க வைக்க சம்மதித்தார்.
இப்போது கதையே புதுசாக மாறிப்போனதால் காட்சிகளை மாற்ற இயக்குனர் பாலாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
பாலா எந்த காட்சியை நீக்கவோ புதுசா எடுக்கவோ சம்மதிக்க வில்லை.
பல கட்ட சமரச முயற்சிகளும் பலன் அளிக்காமல் போனதால் வேறு வழியின்றி வர்மா படம் அப்படியே பெட்டிக்குள் முடக்கப்பட்டது.
இந்த நிலையில் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியானது.


அதன்படி வர்மா படம் வெளியாகாது. அதற்கு பதில் அர்ஜுன் ரெட்டி பட கதை மீண்டும் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் ரீமேக் செய்யப்படும். படத்தின் இயக்குனர் பாலா இல்லை. புதிய இயக்குனர் அறிவிக்கப்படுவார். அந்த புதிய படம் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவித்து தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
வழக்கமாக இயக்குனர் பாலாவை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர் தான் எப்போதும் ஷாக்கை சந்திப்பார்.
முதல் முறையாக ஒரு தயாரிப்பாளர் இயக்குனர் பாலாவை தூக்கி எறிந்திருப்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *