வியாழக்கிழமை, ஜூலை 30
Shadow

சிவகார்த்திகேயன்-நயன்தாரா Mr.லோக்கல் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

‘மிஸ்டர் லோக்கல்’ படத்தின் உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் மிஸ்டர்.லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். காதல் கலந்த காமெடி படமாக உருவாகும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே,இ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இசையமைக்கிறார். இந்த நிலையில், படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி கைப்பற்றியிருக்கிறதுஇதனை அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டருடன் பதிவு செய்துள்ளது.

சமீபத்திய ரிலீஸ் படமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சர்வம் தாராள மயம் படமும் இதே நிறுவன வெளியீடுதான். அடுத்த ரிலீசாக LKG வெளியாக உள்ளது.

614 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன