சத்ரு விமர்சனம்

33 Views

பரியேறும் பெருமாள் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, கதிரின் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ‘சத்ரு’.

சப்-இன்ஸ்பெக்டர் பதவியேற்று மிடுக்கான அதிகாரியாக வருகிறார் கதிர்.
நேர்மை, துணிச்சலின் காரணமாக பதவியேற்ற சில காலத்திலேயே 2 முறை சஸ்பெண்ட்.

சென்னையில் 5 இளைஞர்கள் குழந்தைகளை கடத்தி அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகின்றனர்.ஒரு மிகப்பெரிய தொழிலதிபரின் குழந்தையை கடத்திவிடுகிறது இந்த கும்பல். வழக்கு கதிரின் கைக்கு வருகிறது. கடத்திய கும்பல் 5 கோடி கேட்டு மிரட்ட, ஒருவழியாக அந்த கும்பலின் ஒருவனை கண்டுபிடித்து அவனை சுட்டுக் கொன்றுவிடுகிறார் கதிர்.

சிறுவனையும் காப்பாற்றிவிடுகிறார். மேலதிகாரி சொன்னதை கேட்காமல் பணி செய்ததால் கதிரை மூன்று மாதம் சஸ்பெண்ட் செய்கிறார் காவல்துறை மேலதிகாரி.

நண்பனை இழந்த அந்த நால்வரும், கதிரின் குடுபத்தில் உள்ள அனைவரையும் கொல்ல நினைக்கிறது. கதிரின் அண்ணன் குழந்தையை கார் ஏற்றி கொல்ல முயற்சிக்கின்றனர். குழந்தை மருத்துவனையிலிருக்க குடும்பத்தில் மற்றவர்களையும், நண்பர்களையும் கதிர் காப்பாற்றினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

ஒரு மிடுக்கான, கம்பீரமான போலீஸ் தோற்றத்தில் நடித்திருக்கிறார் கதிர். வேகம், ஆக்‌ஷன், காதல் என அனைத்தையும் அழகாக கொடுத்திருக்கிறார் கதிர்.

ஐந்து வில்லன்களுக்கும் தலைவனாக வருகிறார் லகுபரன். ராட்டிணம் படத்தின் ஹீரோவாக நடித்து, கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து வில்லனாக நடித்ததற்காக லகுபரனுக்கு பாராட்டுகளை தெரிவிக்கலாம்.

பார்வையிலேயே தனது வில்லத்தனத்தை வெளிப்படுத்துகிறார் லகுபரன். உடன் வரும் மற்ற நால்வரும் சரியான பொருத்தம் தான். சுருஷ்டி டாங்கே, சுஜா வருணீ, நீலிமா ராணி உள்ளிட்ட மூன்று பெண்கதாபாத்திரங்களும் இருந்தாலும், அக்கதாபாத்திரத்திற்கு உயிரோட்டம் இல்லை.

நல்ல ஒரு திரைக்கதை அமைத்திருந்தாலும், ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் லாஜிக் ஓட்டைகளை இயக்குனர் சற்று கவனித்திருக்கலாம்.

கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து பாடல்கள் எதுவும் படத்தில் வைக்கவில்லை. பின்னனி இசை கதையின் ஓட்டத்திற்கு உயிர் கொடுத்துள்ளது.

சத்ரு – அதிரடி களம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *