வியாழக்கிழமை, ஜூலை 9
Shadow

வக்கிரபுத்திக்கு வழி சொல்லும் சூப்பர் டீலக்ஸ் – கோடங்கி விமர்சனம்

 

தலைக்கனம் பிடித்த இயக்குனரின் வக்கிரபுத்திக்கு வழி சொல்லும் சூப்பர் டீலக்ஸ்…

காமத்தையும் ஆபாச வார்த்தைகளையும் கலந்து விட்டால் சினிமாவில் ஜெயித்தது விடலாம் என்று எந்த மடையன் சொல்லிக் கொடுத்தானோ தமிழ் சினிமாவின் சாபக்கேடு விஜய்சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ்.

விஜய்சேதுபதி திருநங்கை ஷில்பாவாக அரை மணி நேரத்திற்கு வருகிறார். பாவம் திருநங்கைகள் என சொல்லும் அளவுக்கு அத்தனை பாவமான காட்சிகள்.
அருவருப்பான காட்சிகள். ஆபாசமான சித்தரிப்பு.இயக்குனர் தியாகராஜ குமாரராஜாவின் மட்டமான சிந்தனை காட்சிக்கு காட்சி.

சமந்தா நடித்த கதாபாத்திரம் மிக மிக கேவலமான காட்சியமைப்பு. ஆபாசத்தின் உச்சம்.

சரி கதை என்ன அப்படின்னு பாத்தா…

சமந்தா – பஹத் பாசில் ஜோடி விருப்பம் இல்லாத புருஷன் பொண்டாட்டி. புருஷன் இல்லாத போது முன்னாள் கல்லூரி காதலனை வீட்டுக்கு வரச் சொல்லி தகாத உறவு வைத்துக் கொள்ளும் சமந்தா. அப்படி உறவு கொள்ளும் போது அந்த காதலன் செத்து போகிறான். அவன் உடலை எப்படி புருஷனோடு சேர்ந்து மறைக்கிறா சமந்தா… இது ஒரு கதை…

அதில் சமந்தாவை பார்த்து பகத் பாசில் “உன்னை போட்டவன் செத்துட்டான்… போட கூப்பிட்டவனும் செத்துட்டான்…” என்று மட்டமான வசனம் பேசி இயக்குனர் குமாரராஜா தியாகராஜாவின் வக்கிரமான எண்ணத்தை வெளிப்படுத்துகிறார்.

ரம்யா கிருஷ்ணன் செக்ஸ் பட நடிகையா இருந்தவ. இது தெரிஞ்சி தற்கொலைக்கு பீச்சுக்கு போன மிஷ்கின் சுனாமில சிக்கி தப்பிக்கிறார் அதற்கு காரணம் சுனாமி கடவுள் என்று நினைத்து மதம் மாறிவிடுகிறார்.
ரம்யா கிருஷ்ணன் பையன் தன் நண்பர்களோட செக்ஸ் படம் பாக்கும் போது அதுல ரம்யா கிருஷ்ணன் வர்றதை பார்த்து அவளை கொல்ல முயற்சிக்கிறான். அப்ப என்ன ஆகுது இது ஒரு கதை.

ஊரை விட்டு ஓடிப்போன புருஷன் விஜய்சேதுபதி திரும்பி வர்றான்னு காத்திருக்கும் காயத்ரியும் அவள் மகனும். வீட்டுக்கு வந்து நிற்கும் காரில் இருந்து பெண் கெட்டப்பில் திருநங்கை ஆக வரும் விஜய்சேதுபதி. இதை சுத்தி ஒரு கதை.

இப்படி 3 கதைய தனக்கே உரிய வக்கிரமான நடையில் சொல்லி இருக்கிறார் ஆபாச இயக்குனர் தியாகராஜா குமாரராஜா.

ஒரு சினிமா மக்களுக்கு ஏதாவது ஒரு நல்ல செய்திய சொல்லி வைக்கனும். இல்ல படம் பாத்துட்டு வெளிய போற வரைக்கும் சிரிக்க வைக்கனும். இது எதுவுமே இல்லாம வக்கிரமான செக்ஸ் காட்சிகளை மட்டுமே கதைக்கு வைச்சி திணிச்சி படு ஆபாசமா படம் எடுத்து இந்த தமிழ் சமூகத்தை தமிழ் சினிமாவை சீரழித்து இருக்கிறார் ஆபாச பட இயக்குனர் தியாகராஜா குமாரராஜா.

விஜய் சேதுபதி நல்ல நடிகர் ஆனா இந்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் அவர் கேரக்டர் பாக்க சகிக்கல. அவரின் உடல் மொழியும் அருவருப்பின் உச்சம். திருநங்கைகள் படும் கஷ்டத்தை சொல்கிறேன் என்று அருவருப்பான காட்சிகளை வைத்து திருநங்கைகளை ஆபாசமாக சித்தரித்து இருக்கிறார் ஆபாச இயக்குனர் தியாகராஜா குமாரராஜா.

போலீஸ் அதிகாரியாக வரும் பக்ஸ் காட்சிகள் எல்லாம் அருவருப்பு ஆபாசம். அதிலும் போலீஸ் நிலையத்திலேயே திருநங்கை விஜய்சேதுபதியிடம் நடந்து கொள்ளும் காட்சிகள் உவ்வே… இயக்குனர் தியாகராஜா குமாரராஜாவின் வக்கிரமான எண்ணம் காட்சிகளாக இருந்தன.

சமூகத்தில் நடப்பது தான் காட்சிகளாக துணிச்சலுடன் இயக்குனர் படமாக்கி இருக்கிறார் என்று சொம்பு தூக்கிகள் கிளம்புவார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் சமூக பொறுப்பு கட்டாயம் இருக்க வேண்டும். அதிலும் சினிமா இயக்கும் ஒவ்வொருக்கும் இது கொஞ்சம் கூடுதலாகவே இருக்க வேண்டும்.

சினிமாவில் காண்பிக்கும் கற்பனை காட்சிகளை நிஜம் என நம்பி பின்பற்றும் வளரும் சமூகத்திற்கு நல்லது சொல்லித் தர வக்கில்லை என்றாலும் இப்படி வக்கிரமான ஆபாசத்தை புகுத்தாமல் இருந்தால் நல்லது தியாகராஜா.

மிஷ்கின் எப்பவுமே அரை மெண்டலாகவே படம் எடுக்கிற இயக்குனர் அவரை நடிகராக்கி ஒரு மதத்துக்கு எதிரான கேலியும் கிண்டலையும் யாரை திருப்தி படுத்த வைத்தீர்கள் தியாகராஜா… அல்லது இப்படி ஒரு மதத்தை கொச்சைப்படுத்த எவ்வளவு கொடுத்தார்கள்.

இந்த சூப்பர் டீலக்ஸ் காயலான் கடைக்கு போடக்கூட தகுதி இல்லாத படம்.

குறிப்பாக சென்சார் போர்டு இந்த வக்கிரமான ஆபாச படத்துக்கு A சான்று கொடுத்து உள்ளது. A குடுத்துட்டா எந்த கருமத்தையும் காட்டிட முடியுமா…

சென்சார் போர்டு எதுக்கு பேசாம கலைச்சிட்டு போயிடுங்க. இல்ல நீங்க குடுக்குற A, U/A, U இதோட சேத்து இனி X, XX, XXX இப்படியும் குடுங்க தமிழ் சினிமா வெளங்கிடும்…

 

கடைசியாக இயக்குனர் தியாகராஜா குமாரராஜா… “நீங்க உங்க அப்பா, அம்மா, பொண்டாட்டி, குழந்தை , அக்கா, தங்கச்சி இப்படி குடும்பத்தோட இந்த சினிமாவுக்கு எந்த சங்கடமும் இல்லாம போவீங்களா… உங்க படத்தோட முத காட்சியில சமந்தா கட்டில்ல ஆடுற சீன் என்னான்னு உங்க குழந்தை கேட்டா என்ன விளக்குவீங்க..?
போலீஸ் ஸ்டேஷன் உள்ளே போலீஸ் அதிகாரி பக்ஸ் திருநங்கை விஜய்சேதுபதிய முட்டிப்போட சொல்லும் காட்சிய பாத்து உங்க தங்கச்சியோ உங்க பொண்ணோ விளக்கம் கேட்டா எப்படி வெளக்குவீங்க என் வெளக்குமாறு இயக்குனரே…
சமந்தா கிட்ட அவன் புருசன் ” உன்னை போட்டவனும் செத்துட்டான்… போட கூப்பிட்டவனும் செத்துட்டான்’ பேசும் வசனத்துல “போட்டதுன்னா” என்னப்பான்னு உன் புள்ள வெளக்கம் கேட்டா எப்படி வெளக்குவீங்க என் வெளக்குமாறு இயக்குனரே…

இது மாதிரி ஆயிரம் கேள்வி வருமே பதில் இருக்கா இயக்குனரே…

மொத்தத்தில் சூப்பர் டீலக்ஸ் காயலான் கடைக்கு போடக்கூட தகுதி இல்லாத சரக்கு..- கோடங்கி

1,112 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன