வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

பி.எம்.நரேந்திர மோடி படத்தை வெளியிட தடைவிதித்தது இந்திய தேர்தல் ஆணையம்!!

பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை இந்திய சினிமாவில் சமீபகாலமாக புகழ்பெற்ற பிரபலங்களின் பயோபிக் திரைப்படங்கள் உருவாவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை விவரிக்கும் வர்த்தக ரீதியான திரைப்படம் 23 மொழிகளில் தயாராகியுள்ளது. இத்திரைப்படத்தில் பிரதமர் மோடியாக விவேக் ஓபராய் நடித்துள்ளார். பிஎம் நரேந்திர மோடி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் நாள் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. நாடாளுமன்றத்துக்கான முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 11 ஆம் தேதிக்குப் பிறகு இந்தத் திரைப்படம் திரைக்கு வர உள்ளதால், அதை வெளியிடுவதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. ஆனால், எதிர்ப்பு மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக படத்தை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டது.

இதைதொடர்ந்து, இதற்கிடையே, பாராளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 11 ஆம் தேதி (நாளை) படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. இந்நிலையில், பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் இன்று தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்தை பார்த்து ஆராய தேர்தல் ஆணையம் தரப்பில் குழு அமைக்க முடிவாகி உள்ளது. குழு பார்த்து ஒப்புதல் அளித்த பிறகு படம் வெளியிடப்படும்.

அரசியல் தலைவரை தொடர்பு படுத்தும் தனிநபரின் நோக்கம் எதுவும் மின்னணு ஊடகங்களில் காட்டப்படக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து, தேர்தல் முடியும் வரை பி.எம். நரேந்திர மோடி படத்தை வெளியிட தடை விதித்து தேர்தல் ஆணையம் இன்று அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

622 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன