
தமிழ் சினிமாவில் சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகைகளில் அமலா பால் முக்கியமானவர். மைனா, அம்மா கணக்கு உள்ளிட்ட பல்வேறு படங்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம். அவர் தற்போது ‘அதோ அந்த பறவை போல’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அறிமுக இயக்குநர் வினோத் கேஆர் இயக்கத்தில் ஹாரர் திரில்லராக உருவாகிறது இந்த திரைப்படம். மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் தொலைந்து போகும் ஒரு இளம் பெண்ணை பற்றிய கதைதான் ‘அதோ அந்த பறவை போல’. இதன் படப்பிடிப்புகள் விரைவாக நடைபெற்று வருகிறது. அமலா பாலின் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு ஆக்சன் காட்சி இதில் படமாக்கப்பட்டுள்ளது.
இதில் அமலா பால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் காட்டுக்குள் அமர வைக்கப்பட்டிருக்கிறார்.
அமலா பால் இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து, எப்படி தப்பித்து ஓடுவது என்ற வருத்தத்தில் என பதிவிட்டுள்ளார்.
