ஓட்டு கேட்டு வராதீர்கள் -விஜய் ரசிகர் வீடுகளில் தொங்கும் போர்டுகளால் அதிமுக கூட்டணி ஷாக் !

20 Views

 

மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருவதையொட்டி தமிழகத்தில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அதிமுகவினர் ஓட்டுக் கேட்டு வர வேண்டாம் என விஜய் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் ‘சர்கார்’. அதிமுக ஆட்சியில் நிகழ்ந்த கந்துவட்டிக் கொடுமை, மருத்துவத்துறை குறைபாடுகள் என பலவற்றையும் சுட்டிக்காட்டி இதில் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சர்கார் பட பேனர்களை எல்லாம் கிழித்து எரிந்தனர்

அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஓட்டுக்கேட்டு வரும் அதிமுகவினரை புறக்கணிக்கும் வகையில், அதிமுகவினர் ஓட்டு கேட்டு வரவேண்டாம், இது விஜய் ரசிகன் இல்லம் என்ற பதாகைகளை வீட்டு வாசலில் மாட்டி வைத்திருக்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *