வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

நதியை இணையுங்கள்… கமலுக்கும் எனக்கும் உள்ள நட்பை கெடுக்காதீர்கள் – ரஜினி

முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படப்பிடிப்பு கிளம்பிய சூழலில் சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், பாஜக-வின் தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு பற்றிய வாக்குறுதி உள்ளது வரவேற்கத்தக்கது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நதி நீர் இணைப்பு திட்டத்தை முதலில் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

நாட்டில் நதிகளை இணைத்தால் தண்ணீர் பிரச்னை, வறுமை தீரும் என தெரிவித்த ரஜினி, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதே நதிகள் இணைப்பு குறித்து தாம் வலியுறுத்தியதாகவும், அந்த திட்டத்திற்கு பகீரத்ன யோஜனா என பெயர் வைக்குமாறு அவரிடம் கூறியதாகவும், பகீரத்ன என்றால் சாத்தியமில்லாதது சாத்தியமாகும் என்பது பொருள் என்றும் தெரிவித்தார்.
அப்போது, கமலுக்கு ஆதரவா என்ற கேள்வியை செய்தியாளர்கள் முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த ரஜினி, யாருக்கும் ஆதரவு இல்லை என்ற என்னுடைய தேர்தல் நிலைப்பாட்டிலும், என்னுடைய அரசியல் நிலைப்பாட்டிலும் எந்த மாற்றமும் இல்லை. எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பை கெடுத்து விடாதீர்கள் என்றார்.

324 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன