வெள்ளிக்கிழமை, மே 17
Shadow

எம்ஜிஆரை வம்புக்கு இழுத்து வாங்கி கட்டிக் கொண்ட பப்ளிசிட்டி பா(ர்)ட்டி கஸ்தூரி..!

 

எம்ஜிஆரை வம்புக்கு இழுத்து வாங்கி கட்டிக் கொண்ட பப்ளிசிட்டி பா(ர்)ட்டி கஸ்தூரி..!

நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் மறந்து போன ரிட்டைர்டு நடிகை. வயசும் ஓடிப்போச்சி… இளமையும் இல்லாம போன பா(ர்)ட்டி நடிகை ஆனபிறகும் ரஜினி, கமல், விஜய், அஜீத் என்று பிரபலங்களை அவ்வப்போது வம்புக்கு இழுத்து சீப்பான பப்ளிசிட்டி தேடிக்கொள்ளும் பா(ர்)ட்டி.
நேற்று சென்னையில் நடந்த ஒரு படவிழாவில் தொகுப்பாளினி வேலை செய்த பின் அந்த தயாரிப்பு நிறுவன செலவில் அதே நட்சத்திர ஓட்டலில் ரூம் எடுத்து ரொம்பவே”உற்சாக “மாக சாப்பிட்டுவிட்டு கிரிக்கெட் பார்த்திருப்பார் போல… அந்த விளையாட்டை நக்கல் அடிப்பதாக நினைத்து தேவை இல்லாமல் ஒரு டிவிட் போட… அது சிக்கலில் முடிந்திருக்கிறது.

சிலர் வாயை கொடுத்து…… புண்ணாக்கி கொள்வார்கள். இந்த பப்ளிசிட்டி பா(ர்)ட்டி தன் கையை வைத்து தானே சூடு கட்டையை எடுத்து சொறிந்து கொண்டுள்ளது.

நடிகை லதா என்ன சொல்கிறார் என்று தொடர்பு கொண்டபோது ஆத்திரத்தின் உச்சியில் இருந்தார் லதா. “நான் 50 வருஷமா நடிச்சிக்கிட்டிருக்கேன். இப்போவரைக்கும் எனக்குன்னு ஒரு மரியாதையை தக்க வைச்சுக்கிட்டிருக்கேன். ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரை. தெய்வமா மதிக்கிற கோடானுகோடி ரசிகர்கள் தமிழ்நாட்டுல இருக்காங்க. அவங்களையெல்லாம் ஒட்டு மொத்தமா மன வருத்தப்படுற மாதிரி இப்படியெல்லாம் எழுதலாமா..?

கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கலையே..? அவங்களுக்கு கருத்துச் சொல்ல ஒரு விஷயம் தேவைப்பட்டுச்சுன்னா அவங்க நடிச்ச படத்துல இருந்தே சொல்லியிருக்கலாமே..? எதுக்கு நானும், ‘மக்கள் திலகமும்’ நடிச்ச படத்தைச் சொல்லணும்..?

அவங்கதான் எதுக்கெடுத்தாலும் பெண்ணியம்.. அது… இதுன்னு கருத்துச் சொல்லிட்டிருக்காங்களே.. இதெல்லாம் பெண்ணியம் பேசுறவங்க பேச்சா..? ஒரு பொண்ணே, இன்னொரு பொண்ணை பொதுவெளில அவமானப்படு்த்துற மாதிரி பேசலாமா..? கஸ்தூரிக்கு பப்ளிசிட்டி வேணும்ன்னா வேற எதையாவது செய்யலாம். இது அந்தப் பொண்ணுக்குத் தேவையில்லாத வேலை. இதுவொரு சீப்பான பப்ளிசிட்டி..” என்று கோபத்தோடு சொன்னார்.

773 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன