
மதராசபட்டினம்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான எமி, மிகக் குறைந்த காலத்திலேயே விஜய், ரஜினி, விக்ரம் உள்ளிட்ட முக்கியமான நடிகர்கள் பலருடன் நடித்தது குறிப்பிடத்தக்கது.
ரஜினியின் 2.0 படத்துக்கு பிறகு எமி ஜாக்சன் எந்த படத்திலும் தோன்றவில்லை. ஒரு குழந்தைக்கு தாயாக போகும் எமி, தனது நீண்டநாள் காதலர் ஜார்ஜ் பனயிடோவை திருமணம் செய்யவுள்ளார். எமி ஜாக்சன் திருமண விழா லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில்தான் எமி தான் கர்ப்பமாக இருப்பது பற்றி அறிவித்தார். கருவுற்று 15 வாரங்கள் ஆன எமி, தற்போது இந்த வீடியோவை coming soon என்று பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

921 Views
