சூர்யாவின் சூரைப் போற்று விமானப்படை வீரரின் வாழ்க்கை..!

36 Views

 

இறுதிச் சுற்று படத்தின் வெற்றிக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கும் படம் சூரரைப் போற்று. சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தியாவில் முதல் பட்ஜெட் விமான பயணத்தை உருவாக்கிய முன்னாள் விமானப்படை வீரர் ஜி.ஆர். கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த கதையை உருவாக்கியிருக்கிறார் சுதா கொங்கரா.

இந்திய விமானப்படை வீரராக இருந்த கோபிநாத், வங்காளதேச விடுதலை போரில் கலந்துகொண்டவர். 8 ஆண்டுகள் மட்டுமே ராணுவத்தில் பணிபுரிந்து பின்னர் விருப்ப ஓய்வு பெற்றார். அதன்பிறகு பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டார். பின்னர் குறைந்த பணத்தில் விமான பயணம் மேற்கொள்ள ஏர் டெக்கான் எனும் நிறுவனத்தை துவங்கினார்.

பின்னர் அந்த நிறுவனம் விஜய் மல்லையா நிறுவனத்தோடு இணைந்தது. அரசியலிலும் இறங்கினார். ஆம் ஆத்மி கட்சியிலும் சேர்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *