தமிழக அரசியல், கலைத்துறைக்கு ஜே.கே.ரித்திஷ் திடீர் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு – TMJA இரங்கல் செய்தி

17 Views

 

தமிழக அரசியல், கலைத்துறைக்கு ஜே.கே.ரித்திஷ் திடீர் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் இரங்கல் செய்தி

தமிழக அரசியல், தமிழ் சினிமா , பொது வாழ்வு , சமூக சேவை என அனைத்திலும் தனக்கென தனி முத்திரை பதித்து பலரை கை தூக்கி விட்ட சகோதரர் ஜே.கே.ரித்திஷ் அவர்களின் திடீர் மரணம் பெறும் அதிர்ச்சியையும், சொல்ல முடியாத துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கலைத்துறை, அரசியல் என இரண்டிலும் பலரை உயர்த்தி அழகு பார்த்தவரை இறைவன் இத்தனை சீக்கிரம் தன்னிடம் அழைத்து கொண்டதை ஏற்க ஏனோ மனம் மறுக்கிறது.

கஷ்டம் என்று தன்னை தேடி வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுத்து மகிழ்ந்த சகோதரனை இத்தனை சீக்கிரம் எங்களிடம் இருந்து எடுத்து கொண்டது நியாயமா என்று இறைவனை கேள்வி கேட்கத் தோன்றுகிறது.

பாசம் மிக்கவரை இழந்து வாடும் அன்னாரின் மனைவி குழந்தைகள் துக்கத்தில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் (TMJA) தன்னையும் இணைத்துக் கொள்கிறது.
அன்னாரின் ஈடு செய்ய முடியாத இழப்பால் அதிர்ந்து போயிருக்கும் மனைவி, குழந்தைகளுக்கு மன ஆறுதலையும், தேறுதலையும் மன தைரியத்தையும் இறைவன் அளிக்கட்டும்.

தமிழ் திரையுலகில், அரசியலில், பொது வாழ்வில் பலருக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுத்து மகிழ்ந்தவரின் திடீர் மறைவுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் (TMJA) ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

வருத்தத்துடன்
நிர்வாகிகள், உறுப்பினர்கள்
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் (TMJA)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *