வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

அரசியல் பரபரப்பிலும் அமீரின் சினிமா டீசரை வெளியிட்ட TTV தினகரன்..!

 

அமீர் நடிப்பில் உருவாகிவரும் அச்சமில்லை அச்சமில்லை படத்தின் டீஸரை டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் அமீர் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் அச்சமில்லை அச்சமில்லை. முத்து கோபால் இயக்கிவரும் இப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி நடித்து வருகிறார். அரசியல் பிரமுகராக எடுக்கப்பட்டுள்ள இப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டு டீஸர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து இப்படத்தின் மூன்றாவது டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. இதை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் டிடிவி தினகரன் ‘அச்சமில்லை அச்சமில்லை பட குழிவனருக்கு வாழ்த்துக்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.

பரபரப்பான தேர்தல் அரசியல் முக்கியமான நேரத்தில் சினிமா டீசரை வெளியிட்ட டிடிவி தினகரனின் செயல் பலராலும் கவனிக்கப்பட்டது.

 

506 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன