ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 27
Shadow

சிம்புவின் 45வது படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கும் நிறுவனம்!

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு. இப்படத்தின் வேலைகள் இன்னும் ஆரம்பிக்காத நிலையில், சிம்புவின் 45வது படத்தினை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. நர்தன் எனும் புதுமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தில் கெளதம் கார்த்திக்கும் நடிக்கிறார்.

பாடல்களை மதன் கார்க்கி எழுதுகிறார். சிம்புவின் 45-வது படமாக உருவாகும் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம்.

நாயகி, இசையமைப்பாளர் உட்பட மற்ற விபரங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறது படக்குழு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன