அன்புமணிக்காக கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதா ? தர்மபுரியில் பல வார்டுகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை

42 Views

10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரைத்து, தேர்தல் ஆணையத்துக்கு, தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’ தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியில் உள்ள 8 வாக்குச்சாவடிகள், பூந்தமல்லி மற்றும் கடலூரில் உள்ள தலா ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரைத்திருக்கிறோம். பட்டன் வேலை செய்யாதது, கள்ள ஓட்டு பதிவு புகார், வாக்குச்சாவடியைக் கைப்பற்றியதாக எழுந்த குற்றச்சாட்டு, தேர்தல் அதிகாரிகளின் அறிக்கை ஆகியவற்றை வைத்து தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைத்திருக்கிறோம்.

மதுரையில் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றதாக எழுந்த புகார் தொடர்பாக, வட்டாட்சியர் சம்பூர்ணம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எதற்காக வட்டாட்சியர் அங்கு சென்றார் என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை வேறு, ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள சேமிப்பு அறை வேறு’’ என அவர் தெரிவித்தார். senthil kumar

தருமபுரி மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக வேட்பாளர் அன்புமணி போட்டியிட்டுள்ளார். திமுக வேட்பாளராக செந்தில்குமார் களத்தில் குதித்தார். அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் போட்டியிடுகிறார். தர்மபுரி தொகுதிக்கு உட்பட்ட பாப்பிரெட்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் நத்தமேடு வாக்குச் சாவடியில் கள்ள ஓட்டுக்கள் குத்தப்பட்டதாக புகார் எழுந்தது.

ஏற்கெனவே தேர்தல் பரப்புரையின் போது அன்புமணி ராமதாஸ் திருப்போரூரில் பேசினார். அப்போது ’’வாக்குச்சாவடியில் நாம மட்டும் தான் இருப்போம். அப்போ என்ன செய்யணும்னு தெரியுதா..? தெரியுதா? தெரியுதா? என மூன்று முறை அழுத்தி கூறியிருந்தார். அப்போதே திமுக கூட்டணிக்கட்சிகள் அவர் பேசியதில் உள் அர்த்தம் உள்ளதாக புகார் தெரிவித்திருந்தனர். தருமபுரியில் மறு வாக்குப்பதிவு நடத்த பரிந்துரை செய்யப்பட்ட 8 வாக்குச்சாவடிகள் உள்ள பகுதிகளில் வன்னியர் சமுதாயத்தினர் அதிகம் வசித்து வருகின்றனர். மறு வாக்குப்பதிவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால் பாமகவினர் கலக்கத்தில் உள்ளனர்

மதுரையில் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றதாக எழுந்த புகார் தொடர்பாக, வட்டாட்சியர் சம்பூர்ணம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எதற்காக வட்டாட்சியர் அங்கு சென்றார் என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை வேறு, ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள சேமிப்பு அறை வேறு’’ என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *