வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

Tag: mp election

தோற்றாலும் சாதித்த கமல்… அரசியல் கட்சிகள் கண்ணை உறுத்தும் ம.நீ.ம. வாக்கு வங்கி…!

தோற்றாலும் சாதித்த கமல்… அரசியல் கட்சிகள் கண்ணை உறுத்தும் ம.நீ.ம. வாக்கு வங்கி…!

Uncategorized
      தோற்றாலும் சாதித்த கமல்... அரசியல் கட்சிகள் கண்ணை உறுத்தும் ம.நீ.ம. வாக்கு வங்கி...! தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, தினகரனின் அமமுக, சீமானின் நாம் தமிழர் ஆகியோருக்கு இடையில் புதிய வரவாக பாராளுமன்ற தேர்தலில் களம்கண்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் என்ன சாதித்தார்கள். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், பெரம்பலூர் ஆகிய தொகுதிகளை தவிர்த்து 36 தொகுதிகளில் போட்டியிட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கணிசமான வாக்குளை பெற்றுள்ளது முதல் சாதனை. பல இடங்களில் அக்கட்சியின் வேட்பாளர்கள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். இது இரண்டாவது சாதனை. ஒட்டுமொத்தமாக 36 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் 15 லட்சத்து 32 ஆயிரத்து 992 வாக்குகளை பெற்றனர். ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்த சில...
தேர்தல் முடிவுகளுக்கு முன்பே கூட்டணிக் கட்சி தலைவர்களை டெல்லிக்கு அழைத்து விருந்து கொடுத்து குஷி படுத்திய பாஜக..!

தேர்தல் முடிவுகளுக்கு முன்பே கூட்டணிக் கட்சி தலைவர்களை டெல்லிக்கு அழைத்து விருந்து கொடுத்து குஷி படுத்திய பாஜக..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  எம்பி தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே டெல்லி அசோகா நட்சத்திர ஹோட்டலில் பா.ஜ.க தலைவர் அமித்ஷா கூட்டணி கட்சித் தலைவர்களை அழைத்து விருந்து அளித்தார். இந்த விருந்தில் தமிழகத்திலிருந்து முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தேமுதிகவின் பிரமேலதா விஜயகாந்த், சுதீஷ், பாமகவின் அன்புமணி, ஜி.கே.வாசன், நடிகர் சரத்குமார், ஏ.சி.சண்முகம், கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மக்களவைத் தேர்தலுக்காக ஏழு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப் பதிவு கடந்த ஞாயிற்றுக் கிழமை நிறைவடைந்தது. ஏழு கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்ததற்கு பிறகு வெளியான கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவித்திருந்தாலும் , மாநில கட்சிகளும் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன என கூறியிருக்கிறார்கள். அதோடு தேர்தல் முடிவுகள் வெளியாகும் 23ம் தேதி காங்கிரஸ் கட்...
4ம் கட்ட தேர்தல் முடிந்ததும் மோடிக்கு பயம் வந்து விட்டது – சொல்கிறார் ராகுல்காந்தி

4ம் கட்ட தேர்தல் முடிந்ததும் மோடிக்கு பயம் வந்து விட்டது – சொல்கிறார் ராகுல்காந்தி

HOME SLIDER, NEWS, செய்திகள்
  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று மத்திய பிரதேசத்தின் திகம்கர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ‘பாராளுமன்றத்துக்கு 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் முகம் சுருங்கி காணப்படுகிறது. அவர் பேட்டிகளின் போது ஒருவித தயக்கத்தை வெளிப்படுத்துகிறார்’ என்று தெரிவித்தார் ரபேல் விவகாரத்தை மீண்டும் எழுப்பிய ராகுல் காந்தி, இந்திய விமானப்படையிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடியை எடுத்து அம்பானியின் பையில் வைத்துள்ளதாக மோடி மீது குற்றம் சாட்டினார். சுமார் 15 பேரின் நலனுக்காக பிரதமர் மோடி நிதி ஒதுக்குவதாகவும், ஆனால் 25 கோடி மக்களின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் ராகுல் காந்தி கூறினார்...
பிரதமர் மோடி விதி மீறவில்லை – தேர்தல் கமிஷன்

பிரதமர் மோடி விதி மீறவில்லை – தேர்தல் கமிஷன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பிரதமர் மோடி தேர்தல் விதிமுறைகளை மீறவில்லை - தேர்தல் ஆணையம் விளக்கம் * ஏப்.1-ம் தேதி மகாராஷ்டிரா வர்தாவில் பிரதமர் மோடி பேசியதில் தேர்தல் விதிமீறல் இல்லை என தேர்தல் ஆணையம் விளக்கம்

மோடியை எதிர்த்து வாரணாசியில் ராணுவ வீரரை களம் இறக்கிய சமாஜ்வாதி கட்சி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மோடியை எதிர்த்து வாரணாசியில் ராணுவ வீரரை களம் இறக்கிய சமாஜ்வாதி கட்சி..! பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து குறை கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டதால் தேஜ் பகதூர் யாதவ் என்ற பாதுகாப்பு படை வீரர் கடந்த 2017 ஆம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், முன்னாள் பாதுகாப்பு படை வீரரான தேஜ் பகதூர் யாதவ் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். ஊழல் பிரச்சினையை நான் எழுப்பியதால், என்னை பணி நீக்கம் செய்தார்கள். எனது முதல் நோக்கம் பாதுகாப்பு படை துறையில் உள்ள ஊழலை ஒழிப்பதுதான். எனவே, வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட முடிவு செய்துள்ளேன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த பாராளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதிக்கு ஏழாவது கட்டமாக மே 19-ம் தேதி வா...
மோடி நீங்கள் பிரசாரம் செய்கிறீர்களா? குதிரை பேரம் நடத்துகிறீர்களா?- திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் கமிஷனிடம் புகார்

மோடி நீங்கள் பிரசாரம் செய்கிறீர்களா? குதிரை பேரம் நடத்துகிறீர்களா?- திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் கமிஷனிடம் புகார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மோடி நீங்கள் பிரசாரம் செய்கிறீர்களா? குதிரை பேரம் நடத்துகிறீர்களா?- திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் கமிஷனிடம் புகார் மேற்கு வங்காளத்தில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ‘‘திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 எம்எல்ஏ-க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்’’ என்று பிரதமர் மோடி பேசினார். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. மோடி பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான தெரிக் ஓ'பிரைன் கூறுகையில் ‘‘காலாவதியான பிரதமர், உங்களுடன் ஒருவர் கூட வருமாட்டார்கள். ஒரு கவுன்சிலர் கூட வரமாட்டார் நீங்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறீர்களா? அல்லது குதிரை பேரம் நடத்துகிறீர்களா?. உங்களுடைய காலாவதி தேதி விரைவில் வருகிறது. நீங்கள் குதிரை பேரம் நடத்துவதாக நாங்கள் தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்துள்ளோம்’’ எ...
தமிழ் வீரன் வைகோவின் குரல் மீண்டும் பாராளுமன்றத்தில் ஒலிக்கும் – வைரமுத்து நெகிழ்ச்சி

தமிழ் வீரன் வைகோவின் குரல் மீண்டும் பாராளுமன்றத்தில் ஒலிக்கும் – வைரமுத்து நெகிழ்ச்சி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாடாளுமன்றத்தில் விரைவில் தமிழ் வீரனின் குரல் ஓங்கி ஒலிக்கும்! வைகோவை சந்தித்தபின் வைரமுத்து பேட்டி மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களை, இன்று மாலை 6 மணி அளவில் அவரது அண்ணாநகர் இல்லத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சந்தித்த்து, 17ஆவது நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டதற்காக நன்றி தெரிவித்தார். அது வைகோ மகன்  துரை வையாபுரியும் உடன் இருந்தார். வைகோவை  சந்தித்து விட்டு வந்து செய்தியாளர்களிடம் கவிஞர் வைரமுத்து கூறியதாவது:- “திராவிட இயக்கத்தின் சிங்க முகத்தைப் பார்க்க வந்தேன்; போர்வாளை வாழ்த்த வந்தேன். அண்மைக் காலமாக நான் மகிழ்ச்சியில் இருக்கிறேன். தாய்க் கழகத்தோடு, கலைஞர் வளர்த்த பேரியக்கத்தோடு, தளபதியோடு புரட்சிப் புயல் வைகோ அவர்கள் தோழமையாக, நட்பாக, அன்பாக, குடும்பமாக இணைந்து கொள்கைக் கூட்டணியை வளர்த்தெடுக்கிறா...
அன்புமணிக்காக கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதா ? தர்மபுரியில் பல வார்டுகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை

அன்புமணிக்காக கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதா ? தர்மபுரியில் பல வார்டுகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரைத்து, தேர்தல் ஆணையத்துக்கு, தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’ தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியில் உள்ள 8 வாக்குச்சாவடிகள், பூந்தமல்லி மற்றும் கடலூரில் உள்ள தலா ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரைத்திருக்கிறோம். பட்டன் வேலை செய்யாதது, கள்ள ஓட்டு பதிவு புகார், வாக்குச்சாவடியைக் கைப்பற்றியதாக எழுந்த குற்றச்சாட்டு, தேர்தல் அதிகாரிகளின் அறிக்கை ஆகியவற்றை வைத்து தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைத்திருக்கிறோம். மதுரையில் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றதாக எழுந்த புகார் தொடர்பாக, வட்டாட்சியர் சம்பூர்ணம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எதற்காக வட்டாட்சியர் அங்கு சென்றார் என்பது பற்றி விசாரணை நடைபெற்று ...
தேர்தலில் வாக்களித்த ரஜினிக்கு வலது கை விரலில் மை வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சை ஆனது..!

தேர்தலில் வாக்களித்த ரஜினிக்கு வலது கை விரலில் மை வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சை ஆனது..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, நடிகர்கள்
  தேர்தலில் வாக்களித்த ரஜினிக்கு வலது கை விரலில் மை வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சை ஆனது.   தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளில் நடைபெற்ற இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கி 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தலில் பொதுமக்கள் மட்டுமின்றி திரை பிரபலங்கள் பலரும் காலை முதலே ஆர்வத்துடன் வந்து வாக்களித்து விட்டு சென்றனர். அதே போல் வயதானவர்களும், வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி விட்டு சென்றனர். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வந்து தனது வாக்கை செலுத்தினார். ரஜினிகாந்தின் வருகையால், ஏராளமான ரசிகர்கள் அவரை காண குவிந்தனர். அப்போது ரஜினிக்கு இடது கைக்கு பதிலாக வலது கை விரலில் மை வைக்கப்பட்டது. தேர்தல் பரபரப்பில் இந்த விவகாரம் பெரிதாக ப...
வெளியானது அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியல்!

வெளியானது அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வுக்கு 5, பா.ம.க.வுக்கு 7, தே.மு.தி.க.வுக்கு 4, த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.* *இந்த கூட்டணியில், இடம் பெற்றுள்ள கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கிரவுன் பிளாசா ஓட்டலில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொகுதிகள் பட்டியலை வெளியிட்டனர்.* *அதிமுக:* தென் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் திருவண்ணாமலை சேலம் நாமக்கல் ஈரோடு திருப்பூர் நீலகிரி பொள்ளாச்சி கிருஷ்ணகிரி கரூர் பெரம்பலூர் சிதம்பரம் நாகை மய...