தேர்தலில் வாக்களித்த ரஜினிக்கு வலது கை விரலில் மை வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சை ஆனது..!

45 Views

 

தேர்தலில் வாக்களித்த ரஜினிக்கு வலது கை விரலில் மை வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சை ஆனது.

 

தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளில் நடைபெற்ற இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கி 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தலில் பொதுமக்கள் மட்டுமின்றி திரை பிரபலங்கள் பலரும் காலை முதலே ஆர்வத்துடன் வந்து வாக்களித்து விட்டு சென்றனர்.
அதே போல் வயதானவர்களும், வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி விட்டு சென்றனர்.

குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வந்து தனது வாக்கை செலுத்தினார். ரஜினிகாந்தின் வருகையால், ஏராளமான ரசிகர்கள் அவரை காண குவிந்தனர். அப்போது ரஜினிக்கு இடது கைக்கு பதிலாக வலது கை விரலில் மை வைக்கப்பட்டது. தேர்தல் பரபரப்பில் இந்த விவகாரம் பெரிதாக பேசப்படாத நிலையில், இதுகுறித்து தற்போது கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, தவறுதலாக ரஜினியின் வலது கை விரலில் ஊழியர் மை வைத்திருக்கலாம். இது குறித்துச் சம்மந்தப்பட்ட ஊழியரிடம் விளக்கம் கேட்கப்படும். மேலும் ரஜினியின் வருகை போது பொதுமக்கள் பெருமளவில் வாக்குச்சாவடிக்குள் வந்தது குறித்தும், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் ஓட்டளித்த நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும்’ என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *