வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 18
Shadow

’தர்பார்’ படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், நயன்தாரா இன்று படப்பிடிப்பில் இணையவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

ரஜினி இந்த படத்தில் இரண்டு வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். வில்லனாக இந்தி நடிகர் பிரதிக் பாபர் நடிப்பதாக கூறப்படுகிறது.

அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்த படம் 2020 பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன