
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆகப்போவது கிடையாது. அவர் திரும்பி வரமுடியாது என்பதில் நான் உறுதியாக உள்ளேன். அவர் வருவதற்கான கணக்கை நீங்கள் கூறுங்கள் என்று பேசியுள்ளார். மத்தியில் மாநில கட்சிகளின் கூட்டணியுடன் புதிய அரசு அமையும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் மம்தா பானர்ஜி.
