
தனுஷ் தன் ரசிகர்களுக்கு திடீரென கடிதம் எழுதி வெளியிட்டார்.
அதில் “என் வாழ்க்கையை மாற்றிப் போட்ட துள்ளுவதோ இளமை வெளியாகி 17 ஆண்டுகள் ஓடி விட்டதா…
எல்லாமே நேற்று நடந்தது போல் இருக்கிறது. நடிப்பு என்றாலே என்ன என்று தெரியாமல் வந்த ஒரு சின்னப் பையனை ஆரத் தழுவி ஏற்றுக்கொண்டீர்கள். என் வெற்றியிலும் தோல்வியிலும் கூடவே இருந்து தோள் கொடுத்தீர்கள். என் இதயம் உங்களுக்குச் செலுத்தவேண்டிய நன்றியால் நிரம்பி வழிகிறது. இந்த 17ம் ஆண்டு நிறைவுக்கு வலைதளங்களில் நீங்கள் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச்செய்தி மற்றும் வீடியோக்களால் திக்குமுக்காடிவிட்டேன்.
நன்றி. மிக்க நன்றி. நான் ஒன்றும் அவ்வளவு சரியான நபர் அல்ல. ஆனால் நீங்கள் செலுத்தும் அளவு கடந்த அன்பால் என்னை இன்னும் கொஞ்சம் சரி செய்துகொண்டு பயணிக்க முயல்கிறேன்’என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் தனுஷ்.
கடந்த சில வாரங்களில் தனுஷ் ரசிகர்கள் பலர் மன்ற பதவிகளை காசு இருப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கிறார்கள் என்றும், மன்ற பதவிகள் விற்பனைக்கு என்றும் போஸ்டர் அடித்து ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
அதன் தாக்கத்தை மறக்க திடீரென ரசிகர்களுக்கு தனுஷ் கடித பின்னணி இருக்கலாம் என்கிறார்கள்.
