வியாழக்கிழமை, ஜூலை 30
Shadow

விஷாலுக்கு அக்டோபரில் டும்டும்டும்…!

 

அரசியல்வாதிகள்தான் கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிடுவார்கள். இப்போது அந்த லிஸ்ட்டில் நடிகர் விஷாலும் சேர்ந்து விட்டார்.

நடிகர் சங்கக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா முடிந்தவுடன் தான் திருமணம் என்று அறிவித்திருந்த நடிகர் விஷால் கட்டிடப் பணிகள் இன்னும் முற்றுப்பெறாத நிலையில் தனது திருமணத் தேதியை அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் சங்கத்துக்குப் போட்டியிட்ட போது அவர் அளித்த முக்கிய வாக்குறுதியான ‘கட்டிடம் கட்டி முடிக்காம கல்யாணம் கட்டிக்க மாட்டேன்’ என்ற அவரது வாக்குறுதியையும் மீறியிருக்கிறார்.

தமிழக அரசின் மீது தொடுத்த வழக்குக்காக கோர்ட்டுக்கு வந்தபோது நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர் ஏர்கனவே நிச்சயம் செய்யப்பட்ட அனிஷாவுடன்  தனக்கு அக்டோபர் 9ம் தேதி திருமணம் நடக்கவிருப்பதாக அறிவித்தார். ஆனால் நடிகர் சங்க கட்டிடம் முழுமைபெற குறைந்த பட்சம் இன்னும் ஒரு வருடமாவது ஆகும் என்று தெரிகிறது.

506 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன