ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

பாலிவுட் போகிறார் அஜீத் … இயக்குநர் இவர்தான்…

 

நடிகர் அஜீத் எப்போதும் ஒரு படம் முடித்து அதன் ரிசல்ட் தெரிந்த பின் தான் அடுத்த படத்தை ஓகே சொல்வார்.
இப்போதும் போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வையை முடித்திருக்கிறார்.
மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜீத் நடிக்கலாம் என செய்திகள் கிளம்பியது.
அதிலும் அஜீத் நேரடி இந்தி படமாக இருக்க 3 கதைகள் தயாராக இருப்பதாக போனி கபூரும் சொல்லி இருந்தார்.
அஜீத் தரப்பில் வழக்கமாக ஒரு சிரிப்பு மட்டுமே வந்தது.

இப்போது இந்தி படம் ரெடி. இயக்குனரும் ஓகே. கதையும் பக்கா. அறிவிப்பு மட்டுமே பாக்கி என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

விஷயம் இதுதான்… நேர் கொண்ட பார்வை வாய்ப்பு வந்த போதே இயக்குனர் விஷ்ணு வர்தன் ஒரு கதையுடன் தலயை சந்தித்து பேசி இருக்கிறார்.

அந்த கதை பாலிவுட் பக்கா ஸ்டோரியாம். லைன் பிடித்து போக அஜீத் தரப்பில் கிரீன் சிக்னல் கிடைத்துள்ளது.

அதற்கு முன்பாக இயக்குனர் விஷ்ணு வர்தன் இப்போது கார்கில் வீரர் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து ‘ஷேர்ஷா’ எனும் பெயரில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார்.

கரண் ஜோகர் தயாரிக்கும் இந்தப் படத்தில், சித்தார்த் மல்ஹோத்ரா நாயகனாகி இருக்கிறார். இந்தப் பட அனுபவம் மூலம் பாலிவுட் சினிமா மேக்கிங்கில் தன்னை தயார் செய்து கொள்ளும் விஷ்ணு, இது முடிந்ததும் தல அஜித்தை பாலிவுட் கெங் ஸ்டார் நாயகனாக்க இருக்கிறார்.

361 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன