சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

தமிழ் ஹீரோவுடன் அமெரிக்கா பறந்த அனுஷ்கா..!

 

 

தமிழ் ஹீரோவுடன் அமெரிக்கா பறந்த அனுஷ்கா..!

பாகுபலி என்ற பிரமாண்டமான படத்தில் முக்கியமான ரோலில் நடித்த அனுஷ்கா அடுத்து புதுப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.

 

அதோடு உடல் எடையை குறைப்பதற்காக சிறப்பு சிகிச்சை எடுத்து கொண்டார்.
இந்த நிலையில் பாகுபலி இயக்குனர் ராஜமவுலி கேட்டுக் கொண்டதால் அவர் இப்போது இயக்கி வரும் RRR படத்தில் 3 நிமிடங்கள் மட்டுமே வரக்கூடிய காட்சியில் நடித்தார்.
அதன் பின் திடீரென அமெரிக்கா பறந்திருக்கிறார்.

அவரோடு சாக்லெட் பாய் மாதவனும் ஜோடியாக அமெரிக்காவுக்கு பறந்திருக்கிறார்கள்.

நடிகர் மாதவன் கடந்த 2 ஆண்டுகளாக நம்பி நாராயண் என்ற விஞ்ஞானி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வந்தார். அந்த ஷூட்டிங் முடித்து வெள்ளை தாடி மீசைக்கு குட்பை சொல்லி மீண்டும் ஸ்வீட் பாய் ஆக மாறினார்.


இப்போது மாதவனும், அனுஷ்காவும் நடிக்கும் ‘சைலன்ஸ்’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அமெரிக்காவில் தான் நடக்க உள்ளது. இதற்காக தான் அனுஷ்காவும், மாதவனும் அமெரிக்கா சென்றுள்ளார்கள்.

 

880 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன