வெள்ளிக்கிழமை, ஜூலை 31
Shadow

அதிமுக ஆட்சி முடியும் நாளில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவாராம் – சொல்வது தமிழருவி மணியன்

 

தமிழ் நாட்டில் இப்போது இருக்கும் அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்த மறுதினம் ரஜினிகாந்த் அரசியல் கட்சி அறிவிப்பு வரும் என்கிறார் தமிழருவி மணியன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சி தொடங்குவார் என்று நான் போகிற இடங்களில் எல்லாம் கேட்கிறார்கள்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நேரத்தில் கண்டிப்பாக ரஜினிகாந்த் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பார். தேர்தலில் மக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைப்பார்.

தமிழகத்தில் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளோடு கூட்டணி வைத்தால் மட்டுமே அரசியல் நடத்த முடியும் என்றால் ரஜினிகாந்த் அரசியலுக்குள்ளேயே வரமாட்டார்.
காரணம் இந்த இரண்டு திராவிட கட்சிகளும் கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை சீரழித்து விட்டது.

இதத்தான் சிஸ்டம் கெட்டு விட்டது என ரஜினிகாந்த் கூறினார்.
அரசியல் கட்சிக்கான அடிப்படை பணிகளை மிக நேர்த்தியாக ரஜினிகாந்த் செய்து வருகிறார் என்கிறார் தமிழருவி மணியன்.

533 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன