சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

இன்று மாலை 5 மணிக்கு ரசிகர்களை சந்திக்க சூர்யா அழைப்பு … எங்கே?

 

 

 

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள என்ஜிகே படம் மே.31-ம் தேதி வெளியாகவுள்ளது.

நடிகர் சூர்யா இன்று (20.5.19) மாலை 5 மணிக்கு ரசிகர்களை ட்விட்டரில் சந்திக்கவுள்ளார் என்று என்ஜிகே பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இயக்குநர் செல்வராகவன் – நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள படம் என்ஜிகே. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.

அரசியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் மே.31-ம் தேதி வெளியாகவுள்ளது.

படம் வெளியீட்டு பணிகளில் படக்குழு மும்மரமாக ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது நடிகர் சூர்யா ரகிகர்களுடன் ட்விட்டரில் பேச உள்ளார் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ நடிகர் சூர்யா என்ஜிகே படம் குறித்து ட்விட்டரில் இன்று (20.5.19) மாலை 5 மணிக்கு ரசிகர்களுடன் பேச உள்ளார். #AskSuriya என்ற ஹேஷ்டேக் மூலம் ரசிகர்கள் கேள்விகளை கேட்கலாம்’ என்று பதிவிட்டுள்ளது

747 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன