புதன்கிழமை, ஜூன் 17
Shadow

உலக அழகி ஆக வேணாம் என ராணுவத்தில் பணியில் சேர்ந்த அழகி..!

 

உலக அழகியாக வாய்ப்பிருந்தும், தாய் நாட்டிற்கு சேவை செய்ய இராணுவத்தில் சேர்ந்த வீரமங்கை.!

டில்லி செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் படித்தவர் மாணவி கரீமாகுல்கர்னி , இவர் தனது சிறு வயதில் ராணுவத்தில் சேர்ந்து நமது நாட்டிற்காக சேவை செய்ய வேண்டும் என விரும்பினார்.

பின் கல்லூரியின் போது ஐஏஎஸ் படித்து, நம் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என,ஐஏஎஸ் தேர்விற்காக தயாரானார்.

அதே நேரத்தில் தனது பொழுது போக்கிற்காக அழகி போட்டிகளிலும் கலந்து கொண்டார்.

இவர் கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பேஜ்அன்ட் என் அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

அடுத்த பேஜ்அன்ட் போட்டி சர்வதேச அளவில் இத்தாலியில் நடக்கிறது. அதில் கலந்து கொள்ள இவருக்கு தற்போது வாய்ப்பு வந்துள்ளது.

இதற்கிடையில் தனது ஐஏஎஸ் தேர்விற்காக தயாரான கரீமா அந்த தேர்வில் நுாலிழையில் வெற்றி பெற தவறினார்.

இருந்தாலும் சோர்வடையாத கரீமாகுல்கர்னி தனது சிறு வயது ஆசையான ராணுவத்தில் சேர்வதற்கு சிடிஎஸ் எனப்படும் தேர்வு நடக்கவுள்ளதை அறிந்து அதற்கு விண்ணப்பித்தார்.

ஏற்கனவே ஐஏஎஸ் தேர்விற்கு சிறப்பாக தயாராகியிருந்த கரீமாகுல்கர்னி இந்த தேர்வை எளிதாக முடித்துவிட்டார்.

அதையடுத்து அவருக்கு பயிற்சி வழங்க இந்தியா ராணுவத்தில் இருந்து உத்தரவும் வந்துவிட்டது. அவர் சென்னையில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் சேர அவருக்கு அழைப்பு கடிதமும் வந்து சேர்ந்தது.

இதே நேரத்தில் அவர் இத்தாலியில் நடக்கும் அழகி போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.

சர்வதேச அளவிலான அழகி போட்டியில் கலந்து கொண்டால், ராணுவ வாய்ப்பை விட வேண்டியது வரும். ராணுவத்தில் சேர்ந்தால் அழகி போட்டியில் பங்கு பெற முடியாது.

ராணுவத்தில் சேர்ந்தால் சம்பளம் மட்டுமே கிடைக்கும்,ஆனால் அவரது சிறு வயதில் இருந்து ஆசைப்பட்ட ராணுவத்தில் சேர்ந்து நம் தாய்நாட்டிற்காக பணியாற்ற வேண்டும் என்ற ஆசை நிறைவாகும்..

அதே அழகி போட்டியில் கலந்து கொண்டால் இவருக்கு அதிக பெயர் மற்றும் புகழ் கிடைக்கும், மக்கள் மத்தியில் பிரபலமாவார். அதிக பணமும் சம்பாதிக்க முடியும்.நடிகையும் ஆகலாம்..

ஆனால்
கரீமாகுல்கர்னி , தனது சிறு வயது ஆசையான ராணுவத்தில் சேர்ந்து நம் தாய்நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற வாய்ப்பையே தேர்வு செய்து, தற்போது சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி முகாமில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

எதையும் இழந்து,சினிமா,அல்லது சீரியலிலாவது முகம் காட்டி விட்டால்?அடுத்து அரசியலில் புகுந்து முதல்வர் ஆகி விடலாம் என கருதும் நம் மக்கள் மத்தியில், நம் தேசத்தையும்,மக்கள் சேவையையும் நேசிக்கும் பெண்ணும் நம் தேசத்தில்தான் இருக்கிறார்…

489 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன