புதன்கிழமை, மே 15
Shadow

ஜி.டி.நாயுடுவை மிஞ்சி மாட்டு சாணத்தில் காரை கவர் செய்த குஜராத்தியின் புது கண்டுபிடிப்பு..!

 

இந்த யோசனைய கண்டு புடிச்சவன பாத்தா ஜி.டி.நாயுடு நாண்டுகிட்டு தொங்கிடுவாரு…

அப்படி என்னத்த கண்டு புடிச்சான்…

அத சொல்றதுக்கு முன்னாடி… 20 லட்சத்துக்கு சொகுசு கார் வாங்கியிருக்கார் இந்த நவீன விஞ்ஞானி!.

வாங்குன காரை வெளிய நிறுத்திட்டு வீட்டுக்குள்ள போனவருக்கு திடீர்னு ஒரு சந்தேகம்…

அக்னி வெயில் மண்டைய பொளக்குதே … கார் மேல வெயில் பட்டா என்னாகும்னு யோசிக்க… பதறிட்டாரு அப்ப அவர் மண்டைக்குள்ள இந்த யோசனை ஆயிரம் வாட்ஸ் பல்ப்பா எரிஞ்சிருக்கு…

உடனே ஆளுங்க கிட்ட சொல்லி கார் முழுக்க மாட்டுச்சாணத்தை பூசி மொழுகி அசத்திபுட்டாரு… அசத்தி…

என்னங்க 20 லட்ச ரூபா காரை இப்படி பன்னிட்டீங்களேன்னு கேட்டா அவர் சொல்றாராம்… “மாட்டு சாணம் கிருமி நாசினி… அடிக்கிற வெயிலுக்கு குளிர்ச்சியாவும் இருக்கும் சூர்ய கதிர் வீச்சில் இருந்தும் தப்பிக்கலாம் என இப்படி செய்தாராம்.

இவரு யோசனைக்கு முன்னாடி நம்மூர் தெர்மாகோல் விஞ்ஞானி செல்லூர் ராஜூ தோத்தார் போங்க…

மாட்ட வைச்சி பெரும் அரசியலே நடக்குது… மாட்டு சாணத்தை வைச்சி ஒரு காருக்கு பெயிண்ட் அடிக்க கூடாதா என்ன?

இவ்ளோ பெரிய விஞ்ஞானி எந்த ஊருன்னு யோசிக்கிறீங்களா… இப்படி பட்ட அறிவாளிகள் மொத்தமா இருப்பது நம்ப பிரதமர் மோடி முன்னாடி முதலமைச்சரா இருந்த குஜராத்ல தான்…

அப்ப இவ்ளோ அறிவு எங்கயிருந்து வந்திருக்கும்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே…

414 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன