
பாஜக முழு மெஜாரட்டியுடன் வென்றாலும் மோடி சீட் காலி… நிதின் கட்கரிதான் பிரதமராம்…!
காங்., முழு மெஜாரட்டி பெற்றால் ராகுல்… கூட்டணி தயவு என்றால் பா.சி., பிரதமராம்..!
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைத்தால் ராகுல்காந்தி பிரதமர் என்றும் கூட்டணி கட்சிகளின் துணையுடன் ஆட்சி அமைத்தால் ப.சிதம்பரம் தான் பிரதமர் வேட்பாளர் என்றும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

தேர்தலுக்கு பின் இதுவரை வெளியான எந்த கருத்துக் கணிப்பிலும் காங்கிரஸ் கட்சி தனித்தோ அல்லது கூட்டணி கட்சியுடன் இணைந்தோ ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கவில்லை.
இருப்பினும் காங்கிரஸ் இந்த தேர்தலில் நல்ல வெற்றி கிடைக்கும் என மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.

200க்கும் அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் ராகுல்காந்தி தான் பிரதமர் என்றும், சுமார் 100 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று மாநில கட்சிகளின் உதவியுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால் ப.சிதம்பரம் பிரதமர் ஆக்கவும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாம்.

காங்கிரஸ் நிலைமை தான் அப்படி என்றால் பாஜக நிலைமை படு வித்தியாசம்… பாஜக வென்றாலும் இந்த முறை மோடி பிரதமர் ஆக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
மோடியை பிரதமராக மீண்டும் ஏற்க கூட்டணி கட்சிகளில் சில கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அப்படியே முழு மெஜாரட்டியுடன் பாஜக ஆட்சி அமைத்தாலும் பிரதமராக நிதின்கட்காரிதான் பதவியேற்க அதிக வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரங்கள் கூறின.
அதனை உறுதி செய்யும் வகையில் ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி திடீரென நிதின்கட்காரியை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
சமீபத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற டீ பார்ட்டி விருந்தில் கூட நிதின் கட்கரிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
