ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20
Shadow

உடல்நல குறைவு காரணமாக மருத்துவனையில் நடிகை குஷ்பு அனுமதி

 

உடல்நல குறைவு காரணமாக மருத்துவனையில் நடிகை குஷ்பு அனுமதிக்கப்பட்டார்.

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், நேற்று மாலை நடிகை குஷ்பு மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளது திரையுலகில் மட்டுமல்லாமல் அரசியல் களத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக குஷ்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்ன ஆனது என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

 

 

இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பான டிவி விவாதங்களில் தன்னால் கலந்துக்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டதற்கு வருந்துகிறேன், என்று குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன