தோற்றாலும் என் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பேன் – பிரகாஷ்ராஜ்

69 Views

 

 

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் பிரகாஷ்ராஜ்.

அரசியல் கட்சி எதிலும் இல்லாவிட்டாலும் கடந்த சில ஆண்டுகளாக பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வந்தார்.

மோடியின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையான பணமதிப்பிழப்பையும், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்துத்துவா அமைப்புகளை தொடர்புபடுத்தியும் கடுமையாக விமர்சித்தார்.

அடுத்த கட்டமாக கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வுக்கு எதிராக தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக களம் இறங்கினார்.

வீதிவீதியாக தீவிர பிரசாரமும் செய்தார்.
ஆனாலும் சினிமா நட்சத்திர அந்தஸ்து அவருக்கு கைகொடுக்கவில்லை. தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார்.

இதுகுறித்து பிரகாஷ்ராஜ் டுவிட்டரில், “என் கன்னத்தில் அறை விழுந்துள்ளது. மேலும் கேலி, இழிவான சொற்கள், அவமானங்கள் எனது பாதையில் வருகின்றன. எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருப்பேன். மதசார்பற்ற இந்தியாவுக்கான போராட்டத்தை தொடர்வேன். இப்போதுதான் கடுமையான பயணம் ஆரம்பித்து உள்ளது. பயணத்தில் என்னோடு இருந்தவர்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *