அம்மா பேச்சை தட்டாத சிம்புவுக்கு ஆகஸ்ட்டில் கல்யாணம்..!

101 Views

 

சிம்புவுக்கு ஆகஸ்ட்டில் கல்யாணம்..!

லிட்டில் சூப்பர் ஸ்டார், எஸ்.டி.ஆர், சிலம்பரசன், சிம்பு என பல பெயர்களை தனக்கே உரிய பாணியில் தமிழ் சினிமாவில் ஒரு இடத்தில் அமர்ந்திருப்பவர் சிம்பு.

நயன்தாராவுடன் காதல், ஹன்சிகாவுடன் காதல் என ஹாட் பீட்டை எகிற வைத்து அப்புறம் அந்த காதல் முறிந்து போய் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி பரபரப்பை கிளப்புவார் சிம்பு.

அதோடு ஏதாவது பேசி அல்லது பாடி சர்ச்சையில் சிக்குவார்.

சில வாரங்களுக்கு முன் சிம்புவின் தம்பி குறளரசனுக்கு திருமணம் நடை பெற்றது.

அப்போது பலரும் சிம்புவுக்கு எப்போது திருமணம் என்றே கேட்டனர். டி.ஆரும் விரைவில் சொல்கிறோம் என்றார்.

இப்போது சிம்புவுக்கு பெண் பார்த்து முடிவு செய்திருக்கிறார்கள். சிம்புவின் வாழ்க்கை துணைவியாக வரப்போகிறவர் திரைத்துறை சேர்ந்தவர் இல்லை.

அம்மா உஷாவின் உறவுக்கார பெண். அம்மா பார்த்த பெண்ணைத்தான் சிம்பு திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.

வரும் ஆகஸ்ட்டில் சிம்பு திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *