புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

மனிதர்களை வைத்து படம் எடுப்பதே கஷ்டம்… மிருகத்தை வைத்து அழகாக படமெடுத்திருக்கிறார்கள் – ராதாரவி

 

குழந்தைகளை கவரும் வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக இருந்தாலும் நிச்சயம் அது குடும்பங்களையும் கவரும். அப்படி குழந்தைகள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரையும் திருப்தி படுத்தும் விதமாக உருவாகி இருக்கிறது ஜீவா நடித்து, டான் சாண்டி இயக்கியுள்ள கொரில்லா திரைப்படம்.

பேப்பரில் இருக்கும் கதையை அப்படியே ஸ்கிரீனில் கொண்டு வருவதற்கு அசாத்தியமான கலை விரும்பி ஒருவர் தயாரிப்பாளராக இருக்க வேண்டும்.

கொரில்லாவின் தயாரிப்பாளர் ஆல் இன் பிக்சர்ஸ் விஜய் ராகவேந்திரா அத்தகையவர் தான். அது படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் தெரிந்தது.

சென்னையில் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இவ்விழாவில் படக்குழு உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இயக்குநர் ராஜேஷ்செல்வா பேசியாதாவது,

“இந்தப்படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என் படத்திலும் வொர்க் பண்ணி இருக்கிறார்கள்.

அதனால் இந்தப்ப்படத்தைப் பற்றி எனக்குத் தெரியும். மிக நன்றாக வந்திருக்கிறது படம். ஜீவா சாரோடு படம் பண்ண வேண்டும் என்பது என் ஆசை. கொரில்லா டீமுக்கு வாழ்த்துகள்” என்றார்

இயக்குநர் கண்ணன் பேசியதாவது,

” இந்தப்படம் மீது எல்லோருக்குமே எதிர்பார்ப்பு இருக்கிறது. ஜீவா என் இயக்கத்தில் வந்தான் வென்றான்  படத்தில் நடித்த போது  சந்தானம் சாருக்கு நிறைய ஸ்கோப் கொடுத்திருந்தார்.

அந்த நல்லமனது அவருக்கு உண்டு. ஒரு அனிமலை வைத்து படமெடுப்பது பெரிய கஷ்டம். அதைச் சிறப்பாகச் செய்திருப்பதற்கு பெரிய வாழ்த்துகள். நிச்சயம் இந்தப்படம் பெரிய வெற்றி அடையும்” என்றார்

நடிகர் ராதாரவி பேசியதாவது,

“என்னை அன்பாக அழைத்த இயக்குநர் சாண்டி அவர்களுக்கும் கதாநாயகன் ஜீவா அவர்களுக்கும் நன்றி. அவர் அப்பா கொடுத்த பணத்தில் தான் நாங்கள் வாழ்ந்திருக்கோம். இப்போது போடப்பட்ட பாடல் நன்றாக இருந்தது. இசை அமைப்பாளரைப் பாராட்டுகிறேன்.

ஜீவாவிற்கு யாரும் காம்படிஷனே கிடையாது. அது அவரது பெரியபலம். அவர் அற்புதமான நடிகர். அவரை முதல் படத்தில் இருந்தே பார்த்து வருகிறேன்.

மனிதர்களை வைத்தே படமெடுப்பது பெரிய கஷ்டம். இவர்கள் மிருகத்தை வைத்து மிக அழகாக எடுத்திருக்கிறார்கள். நான் சில காட்சிகளைப் பார்த்தேன் நன்றாக இருக்கிறது.

எனக்கும் ஒரு நல்ல கேரக்டர் தந்திருக்கிறார்கள். படத்தில் ஒரு வசனம் எனக்குப் பிடிக்காமல் பேசி இருக்கிறேன்  யோகிபாபு நெகட்டிவ் விசயங்களை பாஸிட்டிவாக எடுத்துக் கொள்ளும் நடிகன்.

இந்தப்படத்தில் அவரையும் மிகச்சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்கள். தயவுசெய்து தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்தப்படத்தை ஆதரிக்க வேண்டும்” என்றார்.

357 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன