புதன்கிழமை, ஜூலை 22
Shadow

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்.எல்.ஏ.,க்கள் நாளை பதவி ஏற்கிறார்கள்..!

 

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்.எல். ஏக்கள் நாளை 28ம் தேதி பதவியேற்கவுள்ளனர்.

தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகரின் அறையில் 13 திமுக எம்.எல். ஏக்களும் வரும் 28-ஆம் தேதி பதவியேற்கின்றனர்.

எம்.எல். ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்கிறார்கள்.

நடைபெற்று முடிந்த 22 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து சட்டசபையில் அதிமுக உறுப்பினர்கள் பலம் 118 ஆகவும், திமுக கூட்டணி பலம் 111 ஆகவும் உயர்ந்துள்ளது.

450 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன