
இளையராஜாவின் 75 பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கல்லூரி மற்றும் பல்வேறு இடங்களில் அவரை கௌரவிக்கும் விதமாக பாராட்டு விழாக்கள் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம் சார்பாக பிரம்மாண்ட கலைத் திருவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரகுமான் கலந்துக்கொண்டார். பல்வேறு இசை அமைப்பாளர்கள், நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
ஆனால் பல ஆண்டுகளாக இளையராஜாவின் இசையில் பாடிய எஸ்.பி.பி இந்த விழாவில் பங்கெடுக்கவில்லை என்கிற வருத்தம் இசை ரசிகர்களிடையே இருந்தது.
இளையராஜாவின் பிறந்தநாளான ஜூன் 2-ம் தேதி சென்னை ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் நடக்கவிருக்கும் `இசை செலிப்ரேட்ஸ் இசை’ என்ற இளையராஜாவின் கச்சேரியில் பாடுவதற்காக எஸ்.பி.பி வருகிறார் என்ற செய்தியும், அதற்கான ஒத்திகைகள் வருகிற மே 22-ம் தேதி முதல் தொடங்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சுமார் ஓர் ஆண்டுக்கும் மேலாகப் பாடல்களில் ராயல்டி பிரச்னையால் பேசாமல் இருந்து வந்த இந்த இருவரும் ஒரு வழியாக இணைந்து ஒரே மேடையில் இசைக் கச்சேரியில் மக்கள் முன் தோன்றப்போகின்றனர்.

இந்நிலையில், தற்போது இளையராஜாவின் பிறந்தநாளான ஜூன் 2-ம் தேதி சென்னை ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் நடக்கவிருக்கும் `இசை செலிப்ரேட்ஸ் இசை’ என்ற இளையராஜாவின் கச்சேரியில் பாடுவதற்காக எஸ்.பி.பி வருகிறார் என்ற செய்தியும், அதற்கான ஒத்திகைகள் வருகிற மே 22-ம் தேதி முதல் தொடங்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் எஸ்.பி.பி மட்டுமல்லாது, யேசுதாஸ், பாம்பே ஜெயஶ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதுப், மனோ உட்பட பல முன்னணிப் பாடகர்கள் இதில் பங்கேற்று பாடவிருக்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதை உறுதி செய்யும் விதத்தில் இந்த நிகழ்ச்சிக்கான முன்பதிவு செய்யும் இணையதளத்திலும் அங்கே பாடுபவர்களின் வரிசையில் எஸ்.பி.பி தொடங்கி அத்தனை பாடகர்களின் பெயர்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. மிகுந்த ஆவலோடு ரசிகர்கள் இந்நிகழ்ச்சிக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் இளையராஜா மற்றும் எஸ்.பி.பி ஒத்திகையில் ஈடுபடும் புகைப்படம் வெளியாகியுள்ளன..

