Tag: Ilayaraja – spb
மீண்டும் இணைந்த இளையராஜா – எஸ்.பி.பி ஒத்திகை படங்கள் வைரல்..!
இளையராஜாவின் 75 பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கல்லூரி மற்றும் பல்வேறு இடங்களில் அவரை கௌரவிக்கும் விதமாக பாராட்டு விழாக்கள் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம் சார்பாக பிரம்மாண்ட கலைத் திருவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரகுமான் கலந்துக்கொண்டார். பல்வேறு இசை அமைப்பாளர்கள், நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
ஆனால் பல ஆண்டுகளாக இளையராஜாவின் இசையில் பாடிய எஸ்.பி.பி இந்த விழாவில் பங்கெடுக்கவில்லை என்கிற வருத்தம் இசை ரசிகர்களிடையே இருந்தது.
இளையராஜாவின் பிறந்தநாளான ஜூன் 2-ம் தேதி சென்னை ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் நடக்கவிருக்கும் `இசை செலிப்ரேட்ஸ் இசை' என்ற இளையராஜாவின் கச்சேரியில் பாடுவதற்காக எஸ்.பி.பி வருகிறார் என்ற செய்தியும், அதற்கான ஒத்திகைகள் வருகிற மே 22-ம் தேதி முதல் தொடங்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சுமார் ஓர் ...


