
இயக்குநர் மணிரத்னத்தின் மெகா கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா ஷெட்டியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது . நயன்தாரா தரப்பில் இதுவரை அதை உறுதி செய்யவில்லை.

இவர்கள் தவிர நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகி உள்ளனர்.
கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நாயகிகளாக நடிக்க, சத்யராஜ், மோகன் பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மெகா பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த
படத்தில் அனுஷ்கா மிக முக்கியமான கதாபாத்திரம் ஏற்கிறார்.
ஏற்கனவே பாகுபலி, ருத்ரமாதேவி, பாகமதி போன்ற படங்களில் அனுஷ்கா நடிப்பு பரவலாக பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.
