சனிக்கிழமை, மே 2
Shadow

தேர்தல் படுதோல்வி- 6 மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா

பாராளுமன்றத் தேர்தலில் பாஜக 302 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரசின் பாரம்பரிய தொகுதியான அமேதியில் தோல்வியடைந்தார். இதேபோல் பல்வேறு முன்னணி காங்கிரஸ் தலைவர்களும் தோல்வியைத் தழுவினர்.

தேர்தலில் தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று பல்வேறு மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா கடிதங்களை கட்சி தலைமைக்கு அனுப்பி உள்ளனர். உத்தர பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநில தலைவர்களைத் தொடர்ந்து, பஞ்சாப், அசாம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில தலைவர்களும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இதுவரை 6 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள நிலையில், மேலும் சில மாநில தலைவர்கள் ராஜினாமா செய்யலாம் என கூறப்படுகிறது.

545 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன