
யோகிபாபுவின் “பன்னிக்குட்டி” ஷூட்டிங் ஓவர்..!
லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிற‘பன்னிகுட்டி’ என்ற படத்தில் கருணாகரன், யோகிபாபு இருவரும் நடித்து வருகிறார்கள்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் ஷூட்டிங் முடிந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
அனுசரண் முருகையா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் கருணாகரன், யோகிபாபுவுடன் சிங்கம்புலி, திண்டுக்கல் லியோனி, டிபி.கஜேந்திரன், லட்சுமி ப்ரியா, ராமர், தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் கே இப்படத்திற்கு இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்ததால் படத்தை இறுதி செய்யும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி இருக்கிறது.

576 Views
