சனிக்கிழமை, மே 2
Shadow

மோடி பதவியேற்பு விழா-நடிகர் கமல், மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

 

மோடி பதவியேற்பு விழா- மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

சமீபத்திய தேர்தலில் இமாலய வெற்றி பெற்று நரேந்திரமோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். வரும் 30-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும்படி பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. பல்வேறு வெளிநாட்டு தலைவர்களும் விழாவில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில், மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி, நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
திமுக சார்பில் எம்பி.க்கள் டி.ஆர்.பாலு மற்றும் ஆ.ராசா ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய அளவில் திமுக முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

450 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன