
காவி நிறத்துக்கு மாறப்போகும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் உடை..!
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அடையாளம் உலக அரங்கில் நீல நிற உடையாக இருந்தது.
இனி இந்த உலகக் கோப்பை போட்டியில் இருந்து சில அணிகளுடன் ஆரஞ்சு(காவி) நிறத்தில் உடை அணிந்து விளையாடப் போகிறார்கள். இனி அடுத்து வரும் போட்டிகளில் வீரர்களுக்கான உடை நிறம் காவியாக மாறுகிறது.

2019ம் ஆண்டின் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்திய அணி வரும் ஜுன் மாதம் 5ம் தேதி தனது முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து விளையாடுகிறது.
இந்த ஆண்டின் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்த முறை இரு அணிகளும் ஒரே சீருடையில் விளையாட ஐசிசி அனுமதி மறுத்துள்ளது.
ஒரே கலரில் உடை அணிவதற்கு பதில் மாற்று கலரில் சீருடையை தயாராக வைத்திருக்க உத்தரவிட்டுள்ளது. என்ன கலர் என்பதை சம்பந்தப்பட்ட நாடுகளே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இந்தியா, இங்கிலாந்து,இலங்கை, ஆப்கானிதான் உள்ளிட்ட நாடுகள் நீல நிற உடையில் விளையாடி வந்தன. இனி இந்திய அணி இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் விளையாடும் போது மாற்று கலரில் உடை அணிந்து விளையாட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து இந்திய அணி வீரர்கள் ஆரஞ்சு(காவி) நிற உடையில் விளையாட முடிவு செய்துள்ளது.
பாஜக மீண்டும் முழு மெஜாரட்டியுடன் ஆட்சியை பிடித்துள்ளதால் அவர்களுக்கு மிகவும் பிடித்த காவி கலரில் விளையாட்டு வீரர்களுக்கு உடை கலர் மாற்றப்படுவது குறிப்பிடதக்கது.
தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகள் பச்சை நிற உடை அணிந்து விளையாடி வரும் நிலையில், பாகிஸ்தான் தவிர தென்ஆப்பிரிக்கா, வங்கதேசம் அணிகள் மட்டும் வேறு கலரில் உடை அணிந்து விளையாட உள்ளன.
