வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

முதல்முறையாக தென்கொரியாவில் ரிலீஸ் ஆகும் தமிழ்ப்படம் சூர்யாவின் என்.ஜி.கே.

 

முதல்முறையாக தென்கொரியாவில் ரிலீஸ் ஆகும் தமிழ்ப்படம் சூர்யாவின் என்.ஜி.கே.

தமிழ்ப்படங்களின் மார்க்கெட் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் தென்னிந்திய அளவில் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது தமிழ்ப்படங்கள் உலக அளவில் ரிலீஸ் ஆகி பட்ஜெட்டின் ஒரு பகுதியை ஓவர்சீஸ் மார்க்கெட் தயாரிப்பாளருக்கு பெற்றுத் தருகிறது.

அதிலும் அமெரிக்கா, கனடா மற்றும் வளைகுடா நாடுகளில் மட்டும் வெளியாகி கொண்டிருந்த தமிழ் சினிமா கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகின் பல நாடுகளில் வெளியாகி வசூலையும் குவித்து வருகிறது.

ரஜினிகாந்த் நடித்த முத்து ஜப்பானில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஹிட் ஆனது. இதைப் போல பல படங்கள் மொழி மாற்றம் செய்யப்பட்டாலும் தயாரிக்கும் மொழியிலேயே ஆங்கில படங்களை போல உலகம் முழுதும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது குறைவுதான்.
சமீபத்தில் ஸ்ரீதேவி நடித்த மாம் படம் சீனாவில் ரிலீஸ் ஆகி 100 கோடியை வசூலித்தது.

இந்த நிலையில் முதல்முறையாக தமிழ்ப்படம் ஒன்று இந்தியாவில் ரிலீஸ் ஆகும் தினத்திலேயே தென்கொரியாவில் வெளியாகவுள்ளது சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

அந்த பெருமையை பெற்ற படம் சூர்யாவின் ‘என்.ஜி.கே. இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.

தென்கொரியாவில் உள்ள தமிழ்சினிமா ரசிகர்கள் முதல்முறையாக ரிலீஸ் தினத்தன்றே தமிழ்ப்படம் ஒன்றை வரும் 31ஆம் தேதி பார்க்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

361 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன