வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

சிவகார்த்திகேயனை தொடர்ந்து சூர்யா தேதியை வாங்கிய சன் பிக்சர்ஸ் இயக்குனரை தேடுகிறது..!

 

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டியராஜ் இயக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கிறது.

இதையடுத்து அடுத்த படியாக சூர்யா தேதிகளை சன் நிறுவனம் வாங்கி உள்ளது.

சூர்யா நடிப்பில் இப்போது ரிலீசுக்கு ரெடியான படம் என்.ஜி.கே. செல்வராகவன் இயக்கத்தில் உருவான இந்த படம் வரும் 31ம் தேதி உலகம் முழுதும் ரிலீஸ் ஆகிறது.
அதன் பின் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படம் வரும். அதோடு தனது நிறுவனம் சார்பில் சுதா இயக்கத்தில் சூரைப் போற்று படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த படங்களை முடித்த பின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு தேதி கொடுத்திருக்கிறார்.

இந்த படத்தை ஹரி இயக்குவதாக இருந்தது. ஆனால் ஹரியுடன் மீண்டும் இணைந்தால் சிங்கம் பட வரிசையில் இணைந்து விடுவோம் என ஹரி கதையை மறுத்து விட்டார் சூர்யா.

அதனால் சூர்யாவுக்கு ஏற்ற கதையை சன் நிறுவனம் கேட்டு வருகிறது.

326 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன