ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20
Shadow

விஜய்யிடம் அட்லி கேட்ட தேதிகள்… பட்ஜெட் எகிறுதா விஜய்63..?!

 

விஜய்யிடம் அட்லி கேட்ட தேதிகள்… பட்ஜெட் எகிறுதா விஜய்63..?!

 

ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் மெகா பட்ஜெட்டில் விஜய் 63 உருவாகி வருகிறது.
ஷூட்டிங் ஸ்பாட்டில் தீ விபத்து… டெக்னீஷியன் படுகாயம்… கதை திருட்டு … ஷூட்டிங் படங்கள் ரிலீஸ் என பல பரபரப்பை எதிர் கொண்டாலும் எதையும் எடுத்து கொள்ளாமல் விஜய்63 ஷூட்டிங் திட்டமிட்டபடி நடந்து வருகிறது.

இந்த நிலையில் பிரமாண்டமான இயக்குனர் ஷங்கரின் படங்களை விட அவரது உதவியாளர் இயக்கும் படம் மிக பிரமாண்டமான முறையில் வருகிறது என்றால் அது அட்லி படம் தான் என்ற பேரை பெற்றிருக்கிறார் அட்லி.

இதை உறுதி படுத்தும் விதமாக விஜய்63 பட வியாபாரம் இதுவரை இல்லாத அளவுக்கு விற்பனை ஆகி இருக்கிறது.

 

இதெல்லாம் இருக்கட்டும்… விஜய் இந்த படத்தில் நடிக்க கொடுத்த கால்ஷீட் தேதிகளோடு சேர்த்து மீண்டும் 40 நாட்கள் கூடுதலாக வேண்டும் என அட்லி கேட்டிருக்கிறார்.

அட்லியின் இந்த திடீர் கேள்வி விஜய்க்கு கடும் ஷாக்கை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அட்லி படங்களில் பட்ஜெட்டை மீறி படமெடுத்து லாபத்தை இல்லாமல் ஆக்குகிறார் என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் இந்த கூடுதல் தேதிகளால் எத்தனை கோடி பட்ஜெட் எகிறப் போகிறதோ என்ற பதட்டமே ஷாக்குக்கு காரணமாம்…

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன