ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20
Shadow

சஸ்பெண்ட் ஆன போலீசாக சசிக்குமார்..!

 

சசிகுமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை மலையாளத்தில் காலேஜ் டேஸ், காஞ்சி, டியான் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜி.என்.கிருஷ்ணகுமார் இயக்குகிறார்.

இந்த படத்தில் கதாநாயகியாக மானஷா ராதா கிருஷ்ணன் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில், குருசோமசுந்தரம், இளங்கோ குமரவேல், மாரிமுத்து, அப்புக்குட்டி, ஜார்ஜ் மரியான், பசங்க சிவக்குமரன், சுஜாதா, வித்யா ப்ரதீப்,
ரோஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


ஜெபக் மூவிஸ் சார்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் இந்த படம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பாணியில் உருவாகிறது. படத்தில் சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸாக நடிக்கிறார். பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன