
மும்பை நகரின் வசாய் பகுதியில் சாலையில் உள்ள ஒரு கடையில் சிகரெட் வாங்கிக்கொண்டு போன இருவரை தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் மும்பை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், வசாய் பகுதியின் அருகில் பாலிவுட் நடிகர்கள் ஹிர்த்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ரோப் ஆகியோர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்ததும், கைதாகி இருப்பவர்கள் இருவரும் அந்த திரைப்படத்தில் வரும் காட்சிகளுக்காக தீவிரவாதிகள் போல் வேடமிட்டிருந்த துணை நடிகர்கள் என்பதும் தெரிய வந்தது.
ஆனால் அதற்குள் மும்பையில் தீவிரவாதிகள் இருவர் கைது என செய்திகள் பரவி பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது.
காரணம் இரண்டாம் முறையாக மோடி இன்று பிரதமராக பதவி ஏற்க உள்ள நிலையில் மும்பையில் தீவிரவாதிகள் கைது என்றால் பதட்டம் இருக்காதா என்ன…
விசாரணை செய்த பின் அவர்கள் இருவரும் தீவிரவாதிகளாக வேஷம் போட்டவர்கள் என தெரிந்து போலீஸ் நிம்மதி பெருமூச்சு விட்டது.
