வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார் மோடி..!

 

இந்தியாவின் 17வது பிரதமராக நரேந்திர மோடி இரண்டாம் முறையாக பதவி ஏற்றார்.

சமீபத்தில் நடந்த தேர்தலிக் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்றது. அதில் பாஜக மட்டும் தனியாக 303 இடங்களில் வெற்றி பெற்றது.

இதையடுத்து நரேந்திர மோடி மீண்டும் இரண்டாம் முறையாக பிரதமராக தேர்வானார். காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியில் தொடர்ந்து இரண்டாம் முறையாக பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர் மோடி.

இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பல நாடுகளில் இருந்து தலைவர்கள் வந்திருந்தனர்.

நாடு முழுவதும் இருந்து பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் இருவரும் சென்றிருந்தனர். கமலுக்கு அழைப்பு வந்தும் அவர் போகவில்லை.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.

இரவு 7 மணிக்கு 17வது பிரதமராக மோடி பதவி ஏற்றார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பதவியேற்பு விழாவை முன்னிட்டு டில்லி உட்பட நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டது.

356 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன