திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: Edappadi palanisamy CM

இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார் மோடி..!

இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார் மோடி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்தியாவின் 17வது பிரதமராக நரேந்திர மோடி இரண்டாம் முறையாக பதவி ஏற்றார். சமீபத்தில் நடந்த தேர்தலிக் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்றது. அதில் பாஜக மட்டும் தனியாக 303 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து நரேந்திர மோடி மீண்டும் இரண்டாம் முறையாக பிரதமராக தேர்வானார். காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியில் தொடர்ந்து இரண்டாம் முறையாக பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர் மோடி. இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பல நாடுகளில் இருந்து தலைவர்கள் வந்திருந்தனர். நாடு முழுவதும் இருந்து பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் இருவரும் சென்றிருந்தனர். கமலுக்கு அழைப்பு வந்தும் அவர் போகவில்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். இரவு 7 மணிக்கு 17வது பிரதமராக மோடி பதவி ஏற்றார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமா...
சிலை கடத்தல் வழக்கை போல் கொடநாடு கொலை விவகாரத்திலும் தனிக்குழு  விசாரணை வேண்டும் – TTV தினகரன்

சிலை கடத்தல் வழக்கை போல் கொடநாடு கொலை விவகாரத்திலும் தனிக்குழு விசாரணை வேண்டும் – TTV தினகரன்

HOME SLIDER, NEWS, செய்திகள்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கஜா புயலை காரணம் காட்டி திருவாரூர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. எப்போது தேர்தல் நடந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அமோக வெற்றி பெறும். திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்த விவகாரத்தில் ஆளுங்கட்சியும், எதிர் கட்சியும் இணைந்து செயல்பட்டுள்ளது. தி.மு.க. எம்.எல்.ஏ.கள் அ.தி.மு.க.வுடன் ரகசிய உறவு வைத்துள்ளனர். கூட்டுறவு தேர்தலின் போது 60க்கு 40 என்ற சதவீதத்தில் தேர்தல் உடன்பாடு வைத்துக் கொண்டு தேர்தலை நடத்தினர். கொடநாடு கொலை விவகாரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி கண்காணிக்க வேண்டும். கொடநாடு கொலை கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டவர்கள் பல்வேறு விவரங்களை கூறியுள்ளனர். இந்த சம்பவத்தில் 5 பேர் இறந்துள்ளனர். இந்த இறப்பில் சந்தேகம் உள்ளது. இதுக...
தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசு மதிக்கவில்லை -சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசு மதிக்கவில்லை -சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேச்சு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. அதில் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் பேசியதாவது:   தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடையும் வகையில் மத்திய நீர்வள ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது. இது காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்திற்கு வரும் நீரை குறைக்கும் வகையில் கர்நாடக அரசு அணை கட்டுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழகம் சார்பில் முழுநேர உறுப்பினர்கள் இல்லை. முழுநேர தலைவரை நியமிக்காமல் ஆணையத்தை கிடப்பில் போட்டுள்ளதன் உள்நோக்கம் என்ன? காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது. மாநில அரசுக்கு குந்தகம் விளைவிக...
புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக நாகை வந்தடைந்தார் முதலமைச்சர் பழனிசாமி

புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக நாகை வந்தடைந்தார் முதலமைச்சர் பழனிசாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ‘கஜா’ புயலின் கோரத் தாண்டவத்தால் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 20-ந்தேதி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மோசமான வானிலை காரணமாக திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு செல்ல இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பயண திட்டம் திடீரென பாதியில் ரத்தானது. இதற்கிடையே ரத்து செய்யப்பட்ட புயல் சேத பகுதிகளை பார்வையிடும் எடப்பாடி பழனிசாமியின் பயண திட்டம் மீண்டும் வகுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் புயலால் சேதமடைந்த...
கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் வழங்கினார்!

கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் வழங்கினார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
கஜா புயலில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் - லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர வேண்டுகோள். கஜா புயலால் பாதிக்கப்பட்ட நம் தமிழக மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்காக இன்று சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் “மாண்புமிகு” தமிழக முதல்வர் .எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சந்தித்து, எங்களின் "தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்" சார்பாக ரூபாய் 1 கோடி, கஜா புயல் நிவாரண நிதியாக வழங்கியுள்ளோம். மேலும் இத்தருணத்தில் நம் தமிழக மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். புயலால் துயரத்தில் ஆழ்ந்துள்ள நம் சகோதர, சகோதரிகளுக்கு நாம் அனைவரும் நம்மால் இயன்ற சிறிய உதவியோ, பெரிய உதவியோ செய்து இத்துயரத்தில் இருந்து அவர்கள் விரைவில் மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்ப அனைவரும் ஆதரவு தந்து தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நம் விவசாய நண்பர்கள் கஜா புயலின் தாக்குதலால் மிகுந்த பாத...