ஞாயிற்றுக்கிழமை, மே 12
Shadow

தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசு மதிக்கவில்லை -சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேச்சு

 

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. அதில் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் பேசியதாவது:

 

தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடையும் வகையில் மத்திய நீர்வள ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது. இது காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது

காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்திற்கு வரும் நீரை குறைக்கும் வகையில் கர்நாடக அரசு அணை கட்டுகிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழகம் சார்பில் முழுநேர உறுப்பினர்கள் இல்லை. முழுநேர தலைவரை நியமிக்காமல் ஆணையத்தை கிடப்பில் போட்டுள்ளதன் உள்நோக்கம் என்ன?
காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது. மாநில அரசுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மத்திய அரசின் செயல்பாடு உள்ளது. தமிழக எம்.எல்.ஏ.க்களை அழைத்துச் சென்று பிரதமரை முதல்வர் சந்தித்திருக்க வேண்டும்.
மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இதற்கு திமுக முழு ஆதரவு அளிக்கும் என தெரிவித்தார்.
328 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன