Friday, June 5
Shadow

தங்க முலாம் பூசப்பட்ட ஆறுதல் பரிசு பெறும் என்.ஜி.கே. – கோடங்கி விமர்சனம்

329 Views

 

தங்க முலாம் பூசப்பட்ட ஆறுதல் பரிசு பெறும் என்.ஜி.கே. – கோடங்கி விமர்சனம்

அதீத எதிர்பார்ப்பு… பிரமாண்டமான விளம்பரங்கள் பெரும்பாலான நேரங்களில் பெருத்த ஏமாற்றத்தை தரும்… அந்த ரகம் தான் சூர்யாவின் என்.ஜி கே.

சூர்யா நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் என்.ஜி.கே படத்தில் படித்த இளைஞர்களை ஒன்று சேர்த்து இயற்கை விவசாயம் செய்யும் சூர்யா சந்தர்ப்பவசத்தால் அரசியலில் அடிமட்ட தொண்டனாக சேர்ந்து பல சிரமங்களை எதிர் கொண்டு கடைசியில் எப்படி முதல்வர் ஆகிறார் என்று சொல்கிறது.

ஒரு வரி கதை என்னமோ கேக்க நல்லா இருக்கு… இதே மாதிரி படித்த இளைஞர்கள் எல்லாம் அரசியலுக்கு வரமாட்டாங்களான்னு மனசு கெடந்து அடிச்சிகுது…

ஆனா அதான் நிஜத்துல நடக்குறதில்லியே… அட்லீஸ்ட் சினிமாவுலயாவது நடக்கும் எதிர்பாத்தா ஏமாத்தம் தான் மிஞ்சினது…

சூர்யா-செல்வராகவன் கூட்டணி இப்படி ஒரு லைன் கதைய என்.ஜி.கேவுல சொல்றாங்க.

கதைக்கு லைன் புடிச்ச செல்வராகவன் திரைக்கதை அமைக்கும் போது என்ன கவனத்துல இருந்தார்னே தெரியல.

அவ்ளோ லாஜிக் ஓட்டை… தும்பு தூசி எல்லாம் பறக்குது…

சரி கத கழுத … அது கெடக்குது ஒரு பக்கம். .. கதாநாயகன் சூர்யா எப்படியும் பேலன்ஸ் பன்னுவாருன்னு அவர் வர்ற பிரேம் பை பிரேம் காத்து கெடந்ததுதான் மிச்சம்.

சூர்யாவுக்கு பதில் பல இடத்துல நடிகர் திலகம் சிவாஜிகனேசன் வந்து போறதை மறக்கவோ மறுக்கவோ முடியாது…
அவ்ளோ “நடிப்பு”…

அதென்னமோ தெரியல செல்வராகவன் படத்துல சூர்யா இயல்பை மீறி நடிக்க… அது நடிப்புன்னு தெரிஞ்சி போகுது…

இசை யுவன்… பாட்டா கேட்டு ரசிச்ச தண்டல்காரன் பாட்டு அங்க ஏன் வைச்சாங்கன்னு தெரியல… கதையோட ஒட்டவே இல்லை…

ஒரே ஆறுதல் இரண்டு நாயகிகளும் தான்…

அதுல சாய் பல்லவி காதல் மனைவியா வந்து கன்னம் சிவக்க அன்பையும் அதே அளவுக்கு சந்தேகத்தையும் காட்டி ஸ்கோர் வாங்கிக்கிறார்.

நவநாகரீக பெண்ணாக ரகுல் பரீத் சிங்… வசீகரிக்கிறார். ஒரு கட்டத்துல ஹீரோ சூர்யாவையே ரகுல்ப்ரீத் சிங் தான் துப்பாக்கி முனையில காப்பாத்துறார்னா பாருங்களேன்…

பொன்வண்ணன், இளவரசு, பாலாசிங் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

சமீபத்துல தமிழக அமைச்சர் ஒருத்தர் மேல பாலியல் புகார் கிளம்புச்சி…

அத நினைவுபடுத்துற மாதிரி ஒரு காட்சி வந்து போகுது… அந்த நடிகரை டக்குனு பாத்தா அந்த அமைச்சர் மாதிரியே புடிச்சி போட்டிருக்காரு இயக்குனர்.

என்னதான் இளைஞர்கள் நல்லது செய்து அரசியலுக்கு வரனும்னு யோசிச்சாலும் 2 கட்சிய விட்டா வேற வழியே இல்லைன்னும் சொல்லியிருக்கார் இயக்குனர்

படம் முடியும் போது சூர்யா சி.எம்.ஆகிடுறார்…

ஆக சூர்யாவுக்குள்ளும் அரசியல் ஆசை துளிர் விடத் தொடங்கி இருக்கிறது.

மொத்தத்தில் என்.ஜி.கே. படத்துக்கு தங்கம் குடுக்கனும்னு ஆசை பட்டாலும் அதுக்கு இது சரிப்படாததால 2 நாயகிகள் பரவாயில்லை ரகமா இருப்பதால் தங்க முலாம் பூசப்பட்ட ஆறுதல் பரிசுதான் வாங்கும் என்.ஜி.கே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *