வெள்ளிக்கிழமை, மே 1
Shadow

என்னை அழிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் திட்டமிடுகிறது – வடிவேலு பகீர்

 

என்னை அழிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் திட்டமிடுகிறது – வடிவேலு பகீர்

நான் வாழக்கூடாது, என்னை சாகடிக்கவேண்டும் என்று என்னை அழிப்பதற்கு தயாரிப்பாளர் சங்கத்தில் முடிவு செய்துவிட்டார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அதை பற்றி நான் கவலைபடவில்லை.

சினிமாவில் எனக்கு கிடைத்த இடைவெளி கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். என் மகன், மகளுக்கு திருமணம் செய்து கடமையை முடித்தேன். ஒரு வழியாக வாழ்க்கையை செட்டில் செய்துட்டேன். இனிமேல் சினிமாவில் நடிக்கிறது கடவுள் கையில் தான் இருக்கிறது.

இம்சை அரசன் 2-ம் பாகத்தில் 3 விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறேன். எனது பங்களிப்பு இல்லாமல் அந்த படத்தை எடுக்க முடியாது. மொத்த படத்தையும் நான்தான் முதுகில் சுமக்க வேண்டும்.

ஆனால் ‘நான் சொல்கிறபடி மட்டும் நடிங்க என்று சொன்னால் என்ன அர்த்தம். நீங்க நேசமணி டிரெண்டிங்கில் இருக்கிறது என்று சொல்கிறீர்கள். டைரக்டர் என் இஷ்டத்துக்கு நடிக்கவிட்டதுதான் அதற்கு காரணம்.

அதை புரிந்துகொள்ளாமல் இருந்தால் எப்படி? இப்போது நான் நடிக்காமல், வீட்டுலேயே இருக்க வேண்டும் என்பது தான் அவர்களின் ஆசை. அப்படியே இருந்துவிட்டு போகிறேன். மற்றபடி, நான் நேசமணி டிரெண்டிங்கில் இருக்கிறதை இன்னும் பார்க்கவில்லை.

மோடி பதவி ஏற்கும் செய்திதான் எனக்கு தெரியும். நேசமணியை நான் இன்னும் பார்க்கவில்லை’ என்று பதறுகிறார் வடிவேலு.

வடிவேலு பதட்டத்துக்கு காரணம் சில தினங்களுக்கு முன்பு உலக அளவில் டிரண்டிங் ஆன நேசமணி டிவிட்டால் பிரதமர் மோடி 2ம் முறையாக பிரதமர் பதவியேற்பு விழா தகவல்கள் டிரண்ட் ஆவதில் சிக்கலானது.
மோடி விழாவை பின்னுக்கு தள்ளி நேசமணி டிரண்ட் ஆனதால் சிக்கலாகுமோ என வடிவேலு பதட்டப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

514 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன